உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்

அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்

திருச்செங்கோடு: சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து, மைதானத்தில், அவரது பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. கரட்டுப்பாளையம் பகுதியில் அவர் பேசியதாவது: இந்த பிரசார கூட்டம், மழை வந்ததால் முதல் முறையும், கரூர் துயர நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளிப்போனது. தற்போது, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது. கரூரில், வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப் பட்டதாக தகவல். அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என, ஸ்டாலின் கூறி வருகிறார். திருச்செங்கோடு தொகுதியில் மட்டும், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இனிமேல், மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, 1621 கோடி ரூபாயில், கோவையில் 10 கி.மீ., நீளமான பாலம் அமைக்க திட்டமிட்டு, 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதை கிடப்பில் போட்டு விட்டு, இப்போது திறக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு, அவர் பெயர் வைக்கிறார். எங்கு பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார். இந்தியாவிலேயே, சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால், எதில் சூப்பர் முதல்வர்? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mr Krish Tamilnadu
அக் 09, 2025 12:45

பழனி, திருப்பதி.. என ஊர் பெயர்களை வைக்க கூடாது. சாமி, முருகன் .. என கடவுள் துணை பெயர், பெயர்களை வைக்க கூடாது. ஸ். ஜ, .. என வடமொழி எழுத்துக்கள் அரசியல்வாதி பெயர்களை இருக்க கூடாது. எதை உணர்த்த ஆசைப்படுகிறார்கள். அதிகாரம் சரியான வர்கள் கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையா?. தான் தோன்றித்தனமானவர்கள் கையில் கொடுத்தால் தண்டனை மக்களுக்கு தான்.


M Ramachandran
அக் 09, 2025 12:35

நீங்க தான் தாடி சொல்லி விட்டீர்களே? அம்மா ஏர்கனவே மறையந்து விட்டார்கள். உங்க டாடி தான் காஸாவில் தட்டு ஏந்தி கஷ்ட படுகிறார்கள். அதற்க்கு உதவ தானெ நீங்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டம் கூட்டி குயோ முறையோ என்று அழுது புலம்புறீங்க. உங்க குடும்ப குஞ்சு குளுவான்களை தேர்தலில் நிறுத்த தகுந்த இடமாக தேர்ந்தெடுத்தேடுத்தீங்களா அப்பா? அப்புறம் யாரய்யாவாது வென்றவராகளை காவு கொடுக்க வேண்டியிருக்கும். யார் அந்த புண்ணிய வானோ? இந்திரா அம்மையார் அப்போது நாட்டில் எமெர்ஜெண்சி கொண்டு வந்தார்களெ அது இப்போது உள்ளவர்களுக்கு ஞ்யாபகமிருக்காது அல்லது இளம் வயதினருக்கு தெரியாது. நீங்க ஞ்யாபக படுத்துங்க.


Vijayakumar
அக் 09, 2025 10:07

அந்த ஆளு சொன்னது சரியா தப்பான்னு மட்டும் உண்மையா சொல்லுங்க. தெர்மோகோல் போட்டா தண்ணி ஆவி ஆகாதுன்னு நல்ல எண்ணத்தில் தான் போட்டாங்க. ஒரு வேலை சக்ஸஸ் ஆகி இருந்தா நாம் எல்லோரும் மூடிக்கிட்டு இருப்போம்.


ராஜா
அக் 09, 2025 08:01

தெர்மாகோல் மந்திரி மற்றும் விளக்கெண்ணெய் மந்திரி போன்ற அமைச்சர்கள் உள்ளனர் ஆனால் பயன் இல்லை


R.MURALIKRISHNAN
அக் 09, 2025 11:17

திமுகக்கு அதிமுக பரவாயில்லை என்பதே மக்கள் முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை