உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடைவீதிகளில் ஸ்டாலின், இ.பி.எஸ்., பிரசாரம்

கடைவீதிகளில் ஸ்டாலின், இ.பி.எஸ்., பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் கடைவீதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பல இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் கடைவீதிகளில் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபயணமாக வந்து ஓட்டு சேகரித்தார். இந்த நிலையில், இன்று (ஏப்.,3) காலையில் சேலம் கடைவீதிகளில் காய்கறி வியாபாரிகளிடம் அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஓட்டு சேகரித்தார்.அதேபோல், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் செல்லும் பாதை அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நடைபயணமாக சென்று ஓட்டு சேகரித்தார். மாடவீதி கள்ளக்கடை பகுதியில் இருந்து காந்தி சிலை வரை நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த ஸ்டாலின், அந்த வழியாக சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் உரையாடி செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர், அங்கிருக்கும் தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Indian
ஏப் 03, 2024 13:42

தி மு க அல்லது அண்ணா தி மு க வெற்றி பெரும் போல தெரிக்கிறது


Rathinakumar KN
ஏப் 03, 2024 11:58

பாவம் வியாபாரிகள் காலையில் தான் அவர்களுக்கு பொருட்கள் விற்கும் மக்களும் அதிகமா வருவார்கள் அவர்களின் விற்பனையை கெடுக்கும் வகையிலும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து இந்த தேர்தல் பிரச்சாரம் தேவை தானா மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்தால் பணம் கொடுத்து கூட்டத்தை சேர்க்க வேண்டும் எனவே மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் வருகிறார்கள்


Ramesh Sargam
ஏப் 03, 2024 11:45

நாளை ஒருவேளை ஆட்சியில் அமர்ந்தபிறகு இப்படி தெருவில் வந்து நன்றி சொல்வீர்களா என்று மக்கள் கேட்கவேண்டும் மேலும் ஆட்சியில் அமர்ந்தபிறகு இப்படி தெருவி வந்து மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி சேருவீர்களா என்றும் மக்கள் கேட்கவேண்டும் கேட்கமாட்டார்கள் அவர்கள் கொடுக்கும் இலவசங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அந்த திருடர்களையே ஆட்சியில் அமர்த்துவார்கள்


Indian
ஏப் 03, 2024 13:38

நீ என்ன சொன்னாலும் தி மு க தான் ஜெயிக்க போகிறது பார்த்து கொண்டே இரு


s vinayak
ஏப் 03, 2024 09:59

திராவிட கட்சி தலைவர்களை தெருத்தெருவாக அலையவிட்ட பாஜக விற்கு நன்றி


கனோஜ் ஆங்ரே
ஏப் 03, 2024 13:35

“மக்களிடம் செல் மக்களுடன் வாழு மக்களிடம் கற்றுக்கொள் மக்களுக்கு சேவையாற்று” என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வழிவந்தவர்கள் இப்படித்தான் அங்காடியிலும் சாலையிலும் தெருக்களிலும் காய்கனி சந்தையிலும் நடந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள் அதுனாலதான் 55 ஆண்டுகளாக “ரோடு ஷோ” நடத்துற “சீன்” இந்திக்கார பார்டிகளை தமிழ்நாட்டுக்குள்ளார சேர்ப்பதே இல்லை தமிழ்நாட்டு மக்கள் மூணு வேளையும் காய்ச்சுபோன சுக்கா ரொட்டி திங்குற ரோஷமில்லாதவனுங்களா என்ன தமிழ்நாட்டுக்காரனுங்க சுடுசோறு திங்குறவனுங்கல்ல அப்படித்தான் இருப்பானுங்க மிஸ்டர் வினாயக் அதுமட்டுமா கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டுப் பக்கம் வராம சப்பமூக்கு சீனாகாரனை கூட்டியாந்து போட்டோ ஷீட் நடத்த மட்டும் வந்த ஆளு இப்ப பாரு கடந்த ஒரு மாசமா பத்து முறை ஓடி ஓடி வர்றாரு தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை ஓடிவந்தாலும் “வாய்ப்பில்ல ராசா” அப்படீன்னு சொல்லுவானுங்க வரலாற்றுக் கால வீரம் செரிந்த மண்ணில் பிறந்த வீரத்தமிழனுங்க?


மோகனசுந்தரம்
ஏப் 03, 2024 09:16

மக்களே இந்த முறை மிக மிக விழிப்புடன் செயல்படுங்கள். இந்த முறை இரண்டு திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளை ஓட ஓட விரட்டுங்கள். அதுதான் நாம் தமிழகத்திற்கு செய்யப் போகும் மிக மிக நல்ல காரியம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ