உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர்: அன்புமணி

ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர்: அன்புமணி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் பா.ம.க., சார்பில், 'உரிமை மீட்க தலைமுறை காக்க' பிரசாரம் நடைபெற்றது. அதில், அன்புமணி பங்கேற்று பேசியதாவது: நான் ஏதாவது பேசினால், தி.மு.க., அரசு நேரடியாக எனக்கு பதில் அளிக்காமல், வன்னிய சமுதாயத்தை சார்ந்த அமைச்சர்களை விட்டு அறிக்கை விட செய்கிறது. உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அறிவுறுத்தியும் இதுவரை திமுக., அரசு வழங்கவில்லை. வரும் டிச.,7ல், 15 சதவீத உள் ஒதுக்கீடு கோரி, சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறேன்; சிறை செல்ல தயாராக இருக்கிறேன். கடந்த மூன்று தலைமுறைகளாக கருணாநிதி, ஸ்டாலின் குடும்பத்தினர் மதுக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர். நாமக்கல், திருச்செங்கோடு பகுதி ஏழை நெசவாளர்களின் கஷ்டத்தை சாதகமாக பயன்படுத்தி, பெரம்பலுாரில் தி.மு.க., - எம்.எல்.ஏ., சிறுநீரக திருட்டில் ஈடுபட்டுள்ளார். நெசவாளர்களுக்கு ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 40 லட்சம் 50 லட்சத்திற்கு வெளிநாட்டில், இந்த சிறுநீரகங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இந்த சிறுநீரக திருட்டு குறித்து, உரிய விசாரணை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R SRINIVASAN
நவ 03, 2025 18:31

முன்னாள் பாரத பிரதமர் திரு சந்திரசேகர் அவர்கள் ஒரு கேள்வி எழுப்பினார் .அது இல்லாத வேலைக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டார் .இனி இட ஒதுக்கீடு பயன் தராது. தகுதி அடிப்படை என்பதை வைத்தால் அரசியல் வாதிகள் சிபாரிசு செய்ய முடியாது. அன்புமணியை போன்றவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் வன்னியர்களுக்கே 15% கொடுத்து விட்டால் மத்ர ஜாதிக்காரர்கள் எங்கே போவார்கள்?


Perumal Pillai
நவ 03, 2025 17:02

நெற்றி பொட்டில் அடித்தது போல துல்லியமாக சொல்கிறார் . டாக்டர் னா சும்மாவா ?


V. SRINIVASAN
நவ 03, 2025 14:41

நீ திறமை அற்றவன் என்பதால்தான் உன்னை மக்கள் தேர்தலில் தேர்வு செய்யவில்லை அன்புமணி உன்னடைய அப்பாவும் உன்னை ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்


sampath, k
நவ 03, 2025 13:40

He is total waste.


Vasan
நவ 03, 2025 12:23

இது அபாண்டமான பழி. நிர்வாகத்திறமை இல்லாமலா தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது ?


Raj Kamal
நவ 03, 2025 11:10

இதையே தான் உங்கப்பாவும் உன்னை பற்றி தினமும் சொல்லிகொண்டுள்ளார். என்ன செய்ய...?


Rahim
நவ 03, 2025 10:18

உன் மேல உள்ள வழக்குகள் என்ன ஆச்சு


Ramesh Sargam
நவ 03, 2025 08:07

ஸ்டாலின் தன்னுடைய சொந்த காலில் நிற்கவே முடியாமல் தவிக்கிறார்.


Farmer
நவ 03, 2025 07:59

பெத்த அப்பா பத்தி கவலை இல்லை தமிழ் மக்கள் பற்றி அக்கறை இல்லை... இவரால் இந்த ஊருக்கும் மக்களும் என்ன பயன்


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2025 06:05

எவ்வளவு சொன்னாலும் பகுத்தறியும் திறனுடைய மக்களுக்கு தான் புரியும் , அது இல்லாதவர்கள் ஸ்டாலின் போன்ற நெபொடிசா மன்னருக்குத்தான் ஒட்டு போடுவார்கள்


Suresh
நவ 03, 2025 14:57

மண்புழுவுக்கும், பாஜகவுக்கும் கால் கழுகும் வெட்டி பீசு. சிபிஐ வசம் உள்ள கொள்ளை வழக்குக்கு பயந்து பாஜகவின் கால் நக்கும் அடிமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை