உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

சென்னை: ‛‛ தமிழகத்தில் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி குறித்த கவலை கொள்ள வேண்டாம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ., உடன் ராமதாஸ் எப்படி கூட்டணி அமைத்தார் என்பது ரகசியம் என்றார்.இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: சமூக நீதி குறித்த பா.ம.க., கோரிக்கைகளை பிரதமர் ஏற்பாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். கலேல்கர் அறிக்கையை குப்பையில் போட்ட காங்கிரஸ் அரசிடம் இருந்து, 27 சதவீத அறிக்கையை பெற்றுத் தந்தது பா.ம.க., தே.ஜ., கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் பா.ம.க.,வால் சமூக நீதியை வென்றெடுத்து கொடுக்க முடியும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும். சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் ஸ்டாலின், சமூக நீதி குறித்து கவலை வேண்டாம். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAMAKRISHNAN NATESAN
மார் 30, 2024 21:07

ஏதோ எழுதிக்கொடுக்கப்பட்டதை பேசிவிட்டார் நீங்க ஆண்ட பரம்பரை மன்னிச்சு விட்ருங்க


RAMAKRISHNAN NATESAN
மார் 30, 2024 21:07

ஏதோ எழுதிக்கொடுக்கப்பட்டதை பேசிவிட்டார் நீங்க ஆண்ட பரம்பரை மன்னிச்சு விட்ருங்க


ஞானு
மார் 30, 2024 17:08

ஐயா இதோடு விட்டீர்களே!!


Ramesh
மார் 30, 2024 14:54

போங்கோ.நாங்களே பார்த்துக்கிறோம் சொல்லிவிட்டார்


Google
மார் 30, 2024 14:34

அடுத்த கூட்டணி திமுக உடன் முடிவு.


R Kay
மார் 30, 2024 13:30

ஊருக்குதான் உபதேசம் கட்சியில் மட்டும் குடும்பமே முக்கியம் அங்கு இந்த நீதியெல்லாம் கிடையாது


GMM
மார் 30, 2024 13:13

சமூக நீதி என்ற மாயையை அரசு வழங்கும் போது பல சமூகத்தை ஒடுக்கி, வாக்கு வங்கி சமூகத்தை வளர்க்கும் அரசியல் சாராத சமூக குழுக்கள் தானே நன்னெறி வளர்த்து முன்னேற முடியாது? சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் பல சிறிய சமூகம் சிதையும் சாதி கட்சிகள் முழு காலமும் மக்களை சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதல்களை உருவாக்கி, வெற்றி பெறும்? அதிக ஓட்டு வெற்றியை தீர்மானிப்பது மூலம் பிறழ்வு அரசியல் கூட்டணி தவிர்க்க முடியாது


praba
மார் 30, 2024 13:03

சமூக நீதி பற்றி பேச இங்கு யாருக்கும் அருகதை இல்லை


ஜஜ
மார் 30, 2024 12:28

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சமூக நீதி என்றால் என்ன


Shivaji A
மார் 31, 2024 05:02

எல்லா மரங்களை வெட்டிவிட்டு,பசுமை நாடுண்ணு ஊரை ஏமாற்றுவது தான் சமூக நீதி


Shivaji A
மார் 31, 2024 05:02

எல்லா மரங்களை வெட்டிவிட்டு,பசுமை நாடுண்ணு ஊரை ஏமாற்றுவது தான் சமூக நீதி


Sabari S
மார் 30, 2024 12:23

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பாமக,வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் ஸ்டாலினுக்கு சமூக நீதி குறித்து கவலை வேண்டாம் இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ