உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛அப்பா ‛‛அப்பா - புதிய பட்டத்தை நிறுவும் முயற்சியில் ஸ்டாலின்: ‛‛அம்மாவுக்கு போட்டியா?

‛‛அப்பா ‛‛அப்பா - புதிய பட்டத்தை நிறுவும் முயற்சியில் ஸ்டாலின்: ‛‛அம்மாவுக்கு போட்டியா?

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தலைவரை அவரது கட்சியினர் ‛‛அப்பா'', ‛‛அப்பா'' என்று அழைக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lcnkew3r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முயற்சிப்பவர் - முதல்வர் ஸ்டாலின்அழைக்க வேண்டியவர்கள் - திமுகவினர்தமிழக மக்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள். இதனால் தான் நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பட்டப் பெயர் வைத்து, அதை பெருமையாக அழைக்கும் வழக்கமும் வந்தது.

‛‛அம்மா''

பட்டப் பெயரால் அதிகம் அழைக்கப்பட்டவர் அதிமுக தலைவியாக இருந்த ஜெயலலிதா தான். அவரது கட்சியினர் அவரை ‛‛அம்மா'' என்றே அழைத்தனர். ‛‛புரட்சித் தலைவி'' என்று ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட முதல் பட்டப் பெயர், ‛‛இதய தெய்வம்'' என்று ஆகி, பின்னர் ‛‛அம்மா''வில் வந்து நின்றது. ஜெயலலிதாவும் அதைத் தான் ரசித்தார்.அவரது ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த மலிவு விலை உணவு கடைக்கு ‛‛அம்மா உணவகம்'' என்றும், மலிவு விலை குடிநீருக்கு ‛‛அம்மா குடிநீர்'' என்றும் அவரே பெயர் வைத்தார். ஒரு கட்டத்தில் ‛‛அம்மா'' என்றாலே அது ஜெயலலிதா மட்டுமே என்று ஆகிவிட்டது.

‛‛அப்பா''வாக விரும்பும் ஸ்டாலின்

இந்நிலையில் தான் ‛‛அம்மா'' இல்லாத இடத்தை ‛‛அப்பா''வை வைத்து நிரப்பலாம் என்ற யோசனைக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.ஸ்டாலினுக்கு ஏற்கனவே ‛‛தளபதியார்'' என்ற பட்டப் பெயர் இருந்தாலும் அது போதவில்லை என்று அவர் நினைக்கிறார் போல. சமீப காலமாக அவர் தொடங்கி வைத்த முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், கல்லுாரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்ட துவக்க விழாக்களில் பேசும்போதெல்லாம், ‛‛மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும்போது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது'' என்று சொல்லி பூரிப்படைந்தார்.பிப்.19ல் நடந்த மாணவர்களுக்கு தொடர்பு இல்லாத வட சென்னை வளர்ச்சி திட்ட விழாவில் பேசும்போது கூட, ‛‛மாணவர்கள் என்னை அன்புடன் அப்பா, அப்பா என்று அழைக்கின்றனர்'' என்று கூறி பெருமைப் பட்டார்.அவர் இப்படி பேசுவதில் ஒரு முக்கியமான தகவல் ஒளிந்து இருக்கிறது. என்னை இனிமேல் ‛‛அப்பா'' என்று குறிப்பிடுங்கள் என தனது கட்சியினருக்கு சொல்லாமல் சொல்கிறார். இதை கட்சியினரும் புரிந்து கொண்டுள்ளனர். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள், ‛‛தளபதியார் அப்பா'' அவர்களே, ‛‛முதல்வர் அப்பா'' அவர்களே என்றெல்லாம் போற்றிப் பேச துவங்குவார்கள். போகப் போக தளபதியாரும், முதல்வரும் தேய்ந்து போய், ‛‛அப்பா'' மட்டுமே நிற்கும்.சூட்டப்படும் பட்டங்கள் எல்லாமே நிலைப்பதும் இல்லை; சூட்டப்படாத பட்டப் பெயர்கள் தானாக உருவாகி நிலைப்பதும் உண்டு. ஸ்டாலின் விஷயத்தில் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 157 )

M Ramachandran
மார் 21, 2025 11:11

ஏன்னய்யா உமக்கு இந்த வேண்டாத வேலை. ஒரு சொலவடை புலியாய்ய்ய கண்டு பூனையை சூடு போட்ட கதைய்யாக அயல்ல இருக்கு.


K V Ramadoss
மார் 16, 2025 07:36

அம்மா என்று எந்த பெண்ணையும் மரியாதை நிமித்தம் கூப்பிடலாம். ஆனால் அப்பா என்று தன் தந்தையைத்தவிர மற்ற ஆண்களை கூப்பிடும் வழக்கம் நம்மிடம் இல்லை. அது விகாரமாக இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
மார் 15, 2025 21:13

சொந்த புத்தி இல்லை இந்த சொல்புத்தி மன்னருக்கு


PATTALI
மார் 10, 2025 12:10

இவர் யாருடைய அப்பாக்களை பங்குபோட்டுக்கொள்ள முயற்சிக்கிறார்? அவருக்குத்தான் தெரியும்.


sankar
மார் 07, 2025 18:14

செம காமெடி


Ramalingam Shanmugam
பிப் 28, 2025 12:40

ma... என்று கூப்பிடலாம்


KRISHNAN R
பிப் 25, 2025 10:08

எல்லாம் கொடுமை சரவணன்


R. Prathab
பிப் 24, 2025 17:21

அப்பா என்ற வார்த்தையாலஂ அழைப்பது நல்லதல்ல, ஏனென்றால் அவருக்கு நல்ல பெயர் இருப்பதால் மக்கள் அம்மா என்ற வார்த்தையுடன் ஒப்பிடுவார்கள். "தளபதி" என்ற வார்த்தை அப்படியே இருக்கட்டும்.


திண்டுக்கல் சரவணன்
பிப் 24, 2025 11:21

என்னம்ம்மா.................இப்படி பண்றீங்களே மா......


Nellai tamilan
பிப் 23, 2025 15:07

உண்மையில் எல்லா கல்லூரி மாணவர்களும் டோப்பா டோப்பா என்று கேலி செய்வதை அறியாமல் அப்பா என்று தவறாக புரிந்துகொள்வது தான் திராவிட மாடல்


முக்கிய வீடியோ