உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டோஷூட்டில் தான் ஸ்டாலினுக்கு கவனம்

போட்டோஷூட்டில் தான் ஸ்டாலினுக்கு கவனம்

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டத்தின் கல்லுார், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.கேரள முதல்வருடன் கைகுலுக்கி, 'போட்டோஷூட்' எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலைநாட்ட தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட தெம்பில்லாதவராக இருக்கிறார்.வளமிகு தமிழகம், யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல. கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால், அனைத்து குப்பையும் உடனே அகற்றப்பட வேண்டும்.- பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச்செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை