உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி மீதான நம்பிக்கையில் அப்பா என அழைக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

ஆட்சி மீதான நம்பிக்கையில் அப்பா என அழைக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை:''மாணவியர் எல்லாம் என்னை பார்த்து, 'அப்பா அப்பா' என்று உணர்ச்சிகரமாக அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, 712 குடியிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த காலங்களில், வட சென்னை ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதை மாற்றி, மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்துள்ளதோ, அதேபோன்று வட சென்னையை, வளர்ச்சி சென்னையாக மாற்ற வேண்டும்; மற்ற பகுதிகளை விட பெரிதாக உருவாக்க வேண்டும். இதற்காக, அரசு சிறப்பாக பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது.வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்கு, முதலில் நான், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினேன். இப்போது, 6,400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு, பல்வேறு பணிகளை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 23 மாவட்டங்களில், 5,059 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44,609 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள், 100க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி திட்டங்கள் என்னென்ன என்று கேட்கலாம். புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதையெல்லாம் நான் எடுத்து சொல்வதற்கு காரணம், இது தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியிருக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது.இன்றைக்கு மாணவியர் எல்லாம் என்னை பார்த்து, 'அப்பா அப்பா' என்று அழைக்கக்கூடிய உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான செய்தியை பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. சிறப்பான ஆட்சிக்கு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன், தமிழக வீட்டுவசதி வாரிய செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர். வீடு ஓதுக்கீடு ஆணை பெற்றவர்களுக்கு, முதல்வர் சார்பில், இட்லி குக்கர்கள் பரிசாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

xyzabc
பிப் 20, 2025 12:23

மக்கள் எல்லாத்தையும் மறந்து 200 ரூ வாங்கி கொண்டு தி மு க விருக்கே வோட்டை போடுவார்கள்


vbs manian
பிப் 20, 2025 09:24

ஸ்டண்டுக்கு அளவில்லையா.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 20, 2025 09:22

ஐயோ யப்பா என்று கூறுவதை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் திரு. சுடாலின். லஞ்சமும் ஊழலும் உங்களது இரு கண்களாக இருப்பதால் மக்கள் படும் கஷ்டங்களை உங்களுக்கு பார்க்க முடிவதில்லை. அவர்கள் "ஐயோ" "யப்பா" என்று கதறுவதை நீங்கள் அப்பா என்று கூப்பிடுவதாக நினைத்துக்கொண்டு உள்ளீர்கள். திராவிடம் பேசி தமிழகர்களை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டீர்கள். காலம் மாறும்.


Rajarajan
பிப் 20, 2025 07:35

இது உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல ??


D.Ambujavalli
பிப் 20, 2025 06:13

பாலியல் வன்முறைப் பாதிப்பால் ‘ஐயோ, அப்பா’ என்று கதறும் பெண்களின் குரலைக் கேட்காத அப்பா AU மாணவி கேசில் அந்த ‘சாருக்கு’ பாதுகாப்பு கொடுக்கும் கரிசனமிக்க ‘அப்பா’ பெற்ற தகப்பன் இப்படி இருந்தால் பெண்கள் வாழ்வு அலங்கோலமாகிவிடுமே இன்பநிதிக்கு திருமணம் செய்து வைத்தால் கொள்ளுத்தாத்தா ஆகும் வயதில் ‘அப்பா’ image ஐ காப்பாற்றிக்கொள்வதில்தான் அக்கறை இருக்கிறது


D.Ambujavalli
பிப் 20, 2025 06:08

ஏழு மாதக் குழந்தையைக்கூட விடாமல் பாலியல் வன்முறை மிகுத்து உள்ள நிலையில் இந்த ‘அப்பா’ காதில் அந்த செய்திகள் எதுவுமே விழவில்லை போலும் AU மாணவி கேசில் ‘சாரா ‘ ‘சார்களா’ என்று ஆளாளாளுக்கு ஒருவ்ஜ்ராய் கே


நிக்கோல்தாம்சன்
பிப் 20, 2025 05:38

அண்ணா பல்கலை கழக பாலியல் கொடூர வழக்கில் மாணவியின் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு இழுத்த கட்சியில் அப்பா ? ஆஹா காலத்தின் கோலம்


Sathyan
பிப் 20, 2025 04:35

இந்த ஊழல் பெருச்சாளியை அப்பா என்று மக்கள் அழைப்பதாக இவரே கூறி கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. எல்லாம் கலியின் லீலைகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை