உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் சட்டசபை தேர்தல் பிரசாரப் பணிகளை தொடங்குங்க; தி.மு.க., தீர்மானம்

இன்று முதல் சட்டசபை தேர்தல் பிரசாரப் பணிகளை தொடங்குங்க; தி.மு.க., தீர்மானம்

சென்னை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளி ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் தலைமையில் நடந்த தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. * 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்யும் செயல்களை பா.ஜ., அரசு செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்தி மாதம், வாரம் என விழா நடத்துவது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம். இன்று முதல் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் துவங்க வேண்டும் என தீர்மானம்.* தி.மு.க., அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், 2026ல் தி.மு.க., ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். தமிழகத்தை மேம்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தீர்மானம்.* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம். * மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசும், மத்திய அரசும் மணிப்பூர் மாநிலத்தை கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியத்தின் காரணமாக இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தி தீர்மானம் * மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50% நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50% நிதியை மத்திய அரசு தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

duruvasar
நவ 20, 2024 18:59

அப்போ இதுநாள் வரை நடைபெற்ற மா அசுர வளர்ச்சிப்பணிகள் இனி மந்த கதியில்தான் நடக்கும் என புரிந்துகொள்ள வேண்டியதுதானா ?


Bala
நவ 20, 2024 17:33

ஜோசியர் நாள் குறித்து கொடுத்திறுக்கிறார். இதை வெளிப்படையாக சொல்ல முடியாத ஊரை ஏமாற்றும் கோழைகள்.


Bala
நவ 20, 2024 17:31

இராமசாமி நாயக்கரின் பகுத்தறிவு பகலவன்கள் நிறைந்த சுப முஹுர்த்த நாளான இன்று தேர்தல் பணிகளை துவங்குகிறார்கள். நவராத்திரி சிவாஜி, தசாவதாரம் கமல் இவர்களை எல்லாம் தோற்கடிக்கும் வேடதாரிகள்.


sridhar
நவ 20, 2024 16:37

எதுக்கு ? தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ' பிரச்சாரம் ' பண்ணுவது தானே வழக்கம்.


Bye Pass
நவ 20, 2024 14:57

தேர்தலுக்கு ஒரு மாதம் முன் ஆரம்பித்து தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் சரக்கு ஆளுக்கு ஒரு குவாட்டர் இலவசமா தர ஆரம்பிக்கலாம்


ஆரூர் ரங்
நவ 20, 2024 14:12

விட்டுப் போன தீர்மானம். 1. பார்பனீயத்தை அடக்க பிஹார் பிராமணரை ஆலோசகராக வைத்து கவுல் பிராமணரை பிரதமராக ஆக்குவோம்.


கந்தசாமி,மதகுபட்டி
நவ 20, 2024 16:01

இந்த திருட்டு திராவிட மாடல் அரசுக்கு சட்டசபையில் என்னென்ன தீர்மானங்கள் போடுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது! தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொடங்க தீர்மானம் போட்டார்களாம் விளங்கிரும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 14:07

அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மூலமாக ஏற்கனவே பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது .....


Visu
நவ 20, 2024 13:34

ஹிந்தி சொல்லித்தரும் பள்ளி நடத்துவோம் ஆனா ஹிந்தியை எதிர்ப்போம் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில் அரசே செய்யலாமே பீகார் போன்று நிறைய நிதி கொடுங்க இப்ப வர கட்டிங் டீ செலவுக்கே பத்தல


Sivakumar
நவ 20, 2024 13:06

Indru Subha Muhoortha Naal endru Tamil Daily calendar is indicating. "Pahutharivu" koottamallavaa, adhaan indre thodangach chilli utharavu!!


G Mahalingam
நவ 20, 2024 13:06

மக்களே திமுகவை அடித்து விரட்டுங்கள். இனி வோட்டு போட்டால் ஈவேரே அண்ணா கருணாநிதி ஆன்மா கோபித்து கொள்ளும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை