உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளும் வருமான வரி விதிக்கலாம்; ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர் யோசனை

வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளும் வருமான வரி விதிக்கலாம்; ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமெரிக்காவைப் போன்று மாநில அரசுகளும் தங்களின் வருவாயை அதிகரிக்க வருமான வரியை விதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் ராஜா ஜே செல்லையா நினைவு கருத்தரங்களில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது; வருமான வரியைப் பொறுத்தவரையில், நீங்கள் விரிவான செயல்முறையை மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மாநில வருமான வரியாக எடுத்துக் கொள்ளப்படும். மாநில பட்ஜெட்டானது மது, புகையிலை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய 3 வருவாயை நம்பியே இருக்கின்றன. அதில் தற்போது பெட்ரோலியப் பொருட்கள் வரி வருவாய் குறைந்து விட்டது. மாநில வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமெனில், கட்டாயம், வரி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். வரி வருவாயை அதிகரிக்க செலவின வரி மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரடி வரிகளை விதிக்க வேண்டும். அதேபோல, பெட்ரோலிய, எண்ணெய் பொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது வேகமாக நடைபெறவில்லை. நமது இறக்குமதியில் 30 சதவீதம் எண்ணெய் பொருட்களாகும். இதனால், எரிசக்தி பாதுகாப்பில் பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 131 )

VIDYASAGAR SHENOY
ஏப் 20, 2025 10:04

படித்த அறிவிலிகள் அரசுக்கு அறிவுரை சொல்றான்


KRISHNAN R
ஏப் 19, 2025 09:02

ரொம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப நல்லவர்


SENTHIL NATHAN
ஏப் 19, 2025 07:16

இந்த மாதிரி வயசானதுகள ஏம்ப்பா கூட்டத்துக்கு கூப்டுறீங்க? வெறி கோண்ட பூனை விட்டத்தை பாத்து பாஞ்ச மாதிரி உளர்றான்????


Gurumurthy Kalyanaraman
ஏப் 17, 2025 23:14

இவரும் வேற வேலை இல்லாத திராவிட மாடல் போல தெரிகிறது. ஏன் உங்களுக்கு எல்லாம் வேற ஐடியாவே தோன்றாதா? மகாமகத்தை நடத்தி யோகி அவர்கள் மூன்றரை லட்சம் கோடி சம்பாதித்து, அதில் ஒன்றரை லட்சம் கோடியை வளர்ச்சி பணிகளுக்கு எடுத்து கொண்டு பாக்கி இரண்டு லட்சம் கோடியை வங்கி கடன்களை அடைக்க எடுத்து கொண்டாரே. அவரை போல யோசிக்க உங்களுக்கு இறைவன் ஒன்றுமே கொடுக்க வில்லையா சார்? இத்தனை நாள் ரிசர்வ் பாங்கில் வேலை செய்து மக்களுக்கு என்ன பிரயோஜனம்?


Jagannathan Narayanan
ஏப் 16, 2025 10:59

மக்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் அரசாங்கத்திற்கே கொடுத்து விட்டால் அவர்கள் உணவிற்காக என்ன செய்வது.


shyamnats
ஏப் 16, 2025 10:18

மாநில அரசுகள் முறையாக நிர்வாகம் செய்வதை வலியுறுத்துங்கள். இவர் சொல்வதைபோல இரட்டை வரி விதிப்பு எல்லாம், பல்வேறு விலைவாசி உயர்வு, மின் உயர்வு சொத்து வரி உயர்வு போன்றவைகளால் விழி பிதுங்கி நிற்கும் பொது மக்களை மேலும் பள்ளத்தில் தள்ளும். தண்ணி அடிப்பது மட்டுமே பொது மக்கள் கடமை என்பது போல மாநில அரசு செயல் படுவது வருத்தப்பட தக்கது. நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. அதனை மேம்படுத்துவது - முறையான நீர் மேலாண்மை போன்ற - நிர்வாக செயல்பாடுகளை அரசுகள் செய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 14, 2025 12:23

மொதல்ல வருமானத்துக்கு வழி சொல்லுங்கப்பா. இன்று பல லட்சம் படித்த இளைஞர்கள் சரியான வேலையின்றி வெட்டியாக திரிகின்றனர். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏட்படுத்திக் கொடுத்து, வருமானத்துக்கு வழி வகுத்து, பிறகு வரி போடுங்கள்.


R.Ganesan
ஏப் 12, 2025 20:26

இவன் எப்படித்தான் ரிசெர்வ் வங்கி கவர்னராகவும் ஆந்திipர மாநில ஆளுநராகவும் இருந்தான் என்றும் புரியவில்லை இவனை ஒரு அறிவாளியாக மன்மோகன் சிங்/ சந்திரபாபு நாயுடு போன்றோர் எப்படி ஏற்றுகொண்டார்கள் என்றும் புரியவில்லை. ஏனெனில், மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வருமான வரியில் சுமார் 45% அந்தந்த மாநில அரசுகளுக்கு தரப்படுகிறது. அமெரிக்காவில், மதியஅரசுக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியாக வருமான வரி கட்டவேண்டும். இரட்டிப்பு வேலை. எனவே, இவன் சொல்வது பிதற்றல். குறிப்பாக தமிழகத்தில் இதை அமுல் படுத்தினால், கருணாநிதிக்கு கூடுதல் சிலைகள் தவிர எந்த பயனும் இருக்காது.


Jagannathan Narayanan
ஏப் 16, 2025 11:00

I also wonder


VIDYASAGAR SHENOY
ஏப் 11, 2025 15:39

அதற்கு மக்களை விஷம் வைத்து கொள்ளவும் செய்யலாம் அதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. வருமான வரி வாங்கிவிட்டு கொள்ளை அடிக்கலாம் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது நீ ஏழாம் ஒரு அறிவாளி


Dr.C.S.Rangarajan
ஏப் 07, 2025 21:06

Does it not amount to double taxation? When we have double taxation avoidance treaty with Countries like the USA, the suggestion from a scholar of the stature of Dr. C.Rangarajan may not stand the scrutiny of the Supreme Court of India, when challenged as ultra vires of the Constitution of India.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை