உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாம் தமிழர், வி.சி.க.,வுக்கு மாநில கட்சி அந்தஸ்து: கிடைத்தது "ஜாக்பாட்"

நாம் தமிழர், வி.சி.க.,வுக்கு மாநில கட்சி அந்தஸ்து: கிடைத்தது "ஜாக்பாட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் 8.19 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றது. இரண்டு எம்.பி.,க்களை பெற்றதால் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அரக்கோணம், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 6 தொகுதிகளில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள பெரும்பாலான தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4ம் இடத்தையே பிடித்தது. இதனால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டுகள் தேவை என்ற நிலையில் அதனை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது . இதேபோல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. 2019ம் ஆண்டு ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றதால், மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anbuselvan
ஜூன் 05, 2024 16:30

இதுலே ஒருத்தர் பிஜேபி அவரது கட்சியை விட அதிக வோட்டுகள் பெற்றுவிட்டால் தனது கட்சியை களைத்து விடுகிறேன் என்றாரே? என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காத்தோடு போயாச்சு. கை கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 05, 2024 16:05

இன்றைய பேப்பரில் தொகுதி வாரியாக கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை போட்டு உள்ளனர். பி ஜே பி யின் மொத்த ஓட்டு, நாம் தமிழர் கட்சியின் மொத்த ஓட்டுகளை விட பல மடங்கு அதிகம் வந்துள்ளது. சீமான் எப்போ கட்சியை கலைத்துவிட்டு இலங்கை போவார்.


sugumar s
ஜூன் 05, 2024 14:40

VCK is against hindus. I am shocked how Chidambaram famous for Hindus coteries voted for VCK


seenivasan
ஜூன் 05, 2024 13:46

அவர் தந்தை 40 வயதுக்கு மேல் இருந்தால் தபால் அலுவலகத்தில் குறைந்த பட்சம் ஒரு லட்சமாவது மாத சம்பளம் வாங்குவார். ஏனெனில் இது மத்திய அரசு உத்தியோகம். இவர்களை ஏழை என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனது வந்தது??


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 05, 2024 12:14

நீட் தேர்வில் திருவண்ணாமலை செல்வி ஜெயந்தி பூர்வஜா 720/720 பெற்று முதலிடம். வாழ்த்துக்கள் ?? இவள் தந்தை மணிகண்டன் திருவண்ணாமலை போஸ்ட் ஆபிஸில் பணிபுரியும் அலுவலர் ... நீட் தேர்வு ரத்து செய்தால் இந்த மாதிரி ஏழைகள் / நடுத்தர வர்க்கத்தினர் மருத்துவ படிப்பு படிக்க முடியுமா?...


ram
ஜூன் 05, 2024 12:14

வயதுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன, நாம் தமிழர் தனியாக நின்று கட்சி அந்தஸ்தை வாங்கியிருக்கிறார்கள் அனால் இந்த திருமா கட்சி அடுத்தவன் முதுகில் ஏறி கொண்டு ஜெயித்து கட்சி அந்தஸ்து வாங்கியிருப்பது கேவலமான ஒன்று.


Ramesh Sargam
ஜூன் 05, 2024 12:10

ஏற்கனவே சத்தமாக குறைப்பார்கள். இப்பொழுது அங்கீகாரம் வேறு கிடைத்துவிட்டதா... கேட்கவே வேண்டாம், காது செவிடு ஆகும்வரை அதிக சத்தத்தில் குறைப்பார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 11:49

ஆடல்வல்லான் விரைவில் பாடம் கற்பிப்பார்.


murthy c k
ஜூன் 05, 2024 12:17

ஆடல்வல்லான் மேல் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது


Murthy
ஜூன் 05, 2024 11:48

அதென்ன ஜாக்பாட்...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி