வாசகர்கள் கருத்துகள் ( 30 )
தமிழகத்தை குடிகார நாடாக்கி ஏழை மாணவர்களை படிப்பறிவில்லாத முட்டாள்களாக வைத்திருக்க்கதான்..
மாநில கல்லூரிகளில் அந்த அந்த மாநில கோட்டாவில் 85% சேருவதற்கு அந்த அந்த மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்றலாம் . மீதி இருக்கும் 15% கோட்டாவிற்கு நீட் தேர்வு மதிப்பெண்ணை வைத்து சேர்த்துக்கொள்ளலாம் . காரணம் இந்த 15% மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தில் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அந்த மாநில கோட்டா 85% ற்கு நீட் வேண்டும் என்பதை அரசுகள் நீதிமன்றங்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் முடிவிற்கு விடுவது நல்லது . மேற்படி மத்திய அரசின் கல்லூரிகளில் நீட் நடைமுறை பின்பற்றலாம் .
இந்தியா முழுவதுக்கும் என்று என்சிஆர்டி ஆய்வு நிறுவனம் கல்வித் தரத்தை/மாணவர்கள் பயில வேண்டிய புத்தகங்களை தயார் செய்து கொடுக்கிறது. மாநில அரசுகள் அதிலிருந்து சிறிது மாற்றி தங்களுக்கு ஏற்றார் போல மாறுதல்களை செய்து கொள்கின்றன. எட்டாம் வகுப்பு வரை மாறுதல்கள் செய்து கொள்ளட்டும். ஒன்பதாம் வகுப்பில் இருந்து எதற்காக இவர்கள் மாறுதல்கள் செய்ய வேண்டும் ? அதுவும் முக்கியமான இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் ஏன் மாறுதல்களை செய்ய வேண்டும் ? என்சிஆர்டி உலகளாவிய பாடத்திட்டங்களை ஆய்ந்து அவற்றுக்குச் சமமாக இந்தியாவில் பாடத்திட்டத்தை உருவாக்குகிறது. நீட்டுக்கே மூச்சு வாங்கினால், நாளை நமது மாணவர்கள் உயர்கல்விக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்தால் அங்கு சென்று அறிவியல் மற்றும் கணிதத்தில் அடி மட்டத்தில் இருந்து படிப்பார்களா ?
வெளிநாட்டு கல்வியை கம்பேர் செய்தால் நாம் போக வேண்டிய தூரம் மிகவும் அதிகம். இது வாட்ஸ்அப் யூனிவர்சிடில பார்த்து சொல்லும் கருத்தல்ல... என் சொந்த அனுபவம். என் இரு குழந்தைகள்... இருவரும் இங்கே மாநில மற்றும் மத்திய கல்வி திட்டத்தில் சிறந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள். ஒருவர் இந்தியாவின் சிறந்த பல்கலையின் பட்டம் படித்து முதுகலை பட்டம் பெற வெளிநாட்டில் சென்றவர்... மற்றொருவர் மத்திய கல்வி திட்டத்தில் பள்ளி முடிந்ததும் இளநிலை பட்டம் பெற சென்றார்... இருவரும் அங்கு உள்ள கல்விக்கு அடாப்டாக பட்ட கஷ்டத்தை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அரசியல்வியாதிகள் மற்றும் அவர்களின் அடிவருடிகளுக்கு புரியாத விஷயம் அது. அதனால் தான் சொல்றேன் நம் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி முறை உலகத்தரம் எட்ட வெகு தூரம் பின்தங்கி இருக்குன்னு. புரியாதவர்கள் மற்றும் தெரியாதவர்கள் தயவு செய்து யாருக்கும் சப்போட்டா பதில் எழுதாதீங்க... என்னை மாதிரி தலையெழுத்தேன்னு இருங்க...
வெளிநாட்டு கல்வியை கம்பேர் செய்தால் நாம் போக வேண்டிய தூரம் மிகவும் அதிகமா? தமிழ் நாடு ஏற்கனவே முன்னேறிய மாநிலம் ....இங்கே படித்து தமிழர்கள் உலகெங்கும் உயர்ந்த பதவியில் உள்ளார்கள் ....தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ...வடக்கன் மாநிலத்தோடு ஒப்பிட முடியாது ....
ஐயா தமிழ் நாட்டு மாணவர்களில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களே உலக அளவில் ஜொலிக்கின்றனர், உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு அவ்வளவு நம்மிக்கை இருந்தால் அடுத்தமுறை, தங்கள் குடும்பத்தில் மருத்துவம் தேவைப்படும் பொழுது வட இந்தியாவில் உள்ள சி. பி . ஸ். பள்ளியில் படித்த டாக்டரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளவும், அதை இங்கு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும் மனசாட்சி இருந்தால்
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை படுற மாதிரி இருக்கு. தமிழ் நாட்டு மாணவர்கள் நலனில் இவ்வளவு அக்கறை இருக்கிறவங்க நீட் நுழைவு தேர்வையே ரத்து பண்ணலாமே. NCERT பாட திட்டத்தில் படிக்கிற மாணவர்கள் மட்டும் நுழைவு தேர்வு பயிற்சி இல்லாம நீட் ல அதிக மதிப்பெண் எடுக்கிறாங்களா என்ன? பனிரெண்டு வருஷ படிப்புல கிடைக்காத அறிவு வெறும் ஒரு வருஷம் படிச்சா அதிக மதிப்பெண் எடுக்கிற ஒரு நுழைவு தேர்வு மூலம் கிடைச்சிடுமா? மருத்துவ கல்லூரியில் சிறப்பான பயிற்சி கொடுத்தா நல்ல மருத்துவர்களை உருவாக்கலாம், அதை விடுத்து வெறும் நுழைவு தேர்வு மூலம் திறமையான மருத்துவர்களை உருவாக்க முடியும்னு நம்ப வைக்கிறாங்க பாரு அதுல தான் இருக்கிறது இவர்களின் பித்தலாட்டம்.
கரெக்ட்டா சொன்ன கொத்தடிமையே... அப்புறம் எதுக்கு 12 ஆம் வகுப்பு வரை படிக்கணும்.. நீட் தேர்வு எழுதணும்...பொறந்த உடன் அந்த குழந்தைக்கு மருத்துவ கல்லூரியில் சிறப்பான பயிற்சி கொடுத்து சிறந்த மருத்துவராக உருவாக்கலாம்... சமசீர் கல்வியில் படிச்சு இருப்ப போல அதான் இப்படியெல்லாம் யோசிக்கிற ....
இருநூறு ரூபாய்க்கு மேலே கூவினாலும் அவ்வளவு தான். அதற்கு மேலே பேட்டா தரமாட்டாங்க.
யார் கிட்டயும் சொல்லிடாதீங்க நீட் தேர்வை ஒழிக்கும் ரஹஸ்யம் எங்ககிட்டயிருக்குது அப்படின்னு இளைய ராஜா சொல்லியிருக்காரு. வரும் 2026 தேர்தலிலும் இதையே சொல்வாரு...தமிழக மக்கள் நம்பி ஒட்டு போடுங்க...சரியா உதய சூரியனை உருப்படாத சூர்யன் என்று சொல்வதெல்லாம் thappunga
ராஜா நீட்டிற்கு எதிராக கருத்து சொன்னாலே அவர்கள் திமுக வாக தான் இருப்பார்கள் என்கிற உங்களின் அறிவு திறமையை மெச்சினோம். உருப்படியாக பதில் சொல்ல தெரிய வில்லை கருத்து சொல்பவர்களை உபிஸ் ஆக்கி விடுவீர்கள். படி பரமா
மாநில பாட திட்டம் நீட் எக்ஸாம் எழுதுவதற்காக உருவாக்க பட்டது அல்ல. ஒரு மாணவன் 12ம் வகுப்பு படிக்கும் போது, அவனுக்கு என்ன கற்பிக்க வேண்டுமோ, என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை தான் பாட திட்டமாக வைக்க வேண்டும். நீட் எக்ஸாம்கு தேவை இல்லாத விஷயங்கள் இருந்தால், அதை நீட் பரீட்சைக்கு படிக்காதீங்க. ஐஐடி கு படிக்கின்ற மாணவர்கள் என்ன செய்வார்கள்? டிகிரி முடித்து கோவேர்ந்மேன்ட் எக்ஸாம் கு படிக்க வேண்டும் என்பவர்களுக்கு என்று தனி சில்லாபஸ் உருவாக்க முடியாதே
Tamil Nadu is waiting for exemption of NEET to Tamil nadu. I ll explain why? NEET is based on merit is a myth. If you have money and able to get the cut off mark, one can get into medicine. There are 153000 medicine seats in india, which are allocated through NEET. Amongst this, only 99000+ seats are based on NEET ranking, balance 53000+ seats will be given to management of the colleges. They can allot based on the captation fee. Now, anyone enlighten me, when you say NEET is merit based, what is the basis of 53000 seats alloted based on money?
ரொம்ப அறிவாளி. அந்த ஐம்பத்து மூனாயிரம் இடங்களை வைத்துள்ள கல்லூரிகளை நடத்துவது யார்? எல்லாம் திராவிட கல்வித் தந்தைகள். தனியார் கல்லூரிகளை மூடி விட்டால் இந்த ஐம்பதாயிரம் + மாணவர்கள் எங்கு செல்வார்கள் ? தனியார் கல்லூரிகள் அவ்வளவு வாய்ப்புகளை வழங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்கட்டும். யார் வேண்டாம் என்றார்கள் ? இது தவிர எல்லா மாநிலங்களிலும் சுமார் பதினைந்து சதவிகிதம் இடங்கள் பொது இடங்கள். எத்தனை மாநிலங்களில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்று புரிந்து கொண்டு பிறகு பேசவும். அங்கும் இவர்களுக்கு இடம் கிடைக்கும் தானே. உங்களைப் போன்ற கும்மிடிப்பூண்டி தாண்டாதவர்கள் இன்றைய மாணவர்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளீர்கள்.
இதுதான் திராவிட மாடல் சமசீர் கல்வி. இதுக்கு வக்காலத்து வாங்கறவங்க வாரிசுகள் எந்த தமிழக அரசு பள்ளிகளில் படிக்கறாங்க? லிஸ்ட் எங்கே?? அதுசரி, இந்தியா முழுவதும், முக்கிய பாடமான அறிவியல், கணிதம் போன்ற நுழைவு தேர்வு பாடத்திட்டத்தை ஒண்ணா வெக்கணும். ஒரே சமயத்துல மாற்றம் செய்யணும் / புதுப்பிக்கணும். இதுல இதுதான் நுழைவு தேர்வு நடத்தணும். அது இன்ஜினியரிங் / தொழில்நுட்பம் மற்றும் நீட்டாக இருந்தாலும் சரி. சமசீர் கல்வியை குப்பையில் போடவும். ஏனெனில், இதை எந்த தமிழிக முதல்வரும் / அமைச்சரும் / MLA / MP / அரசு பள்ளி ஆசிரியரும், அரசு ஊழியரும் விரும்பி, தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. உண்மையா இல்லையா ? அப்பறம் என்னத்துக்கு வக்காலத்து ?
Where the children of BJP Ministers and MPs were studying? Abroad na. Why? First explain that.
அப்படின்னு யாரு சொன்னாங்க? மாநில பாட திட்டம் சரி இல்ல என்று அர்த்தம்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நலனுக்காக தமிழகத்தின் அற்புதமான பாடத்திட்டங்களை இந்து மதவாத அரசு நீட்டில் சேர்க்கவேண்டும்
ஒரேயொரு நீட் தேர்வுக்காக குறுப்பிட்ட சிலர் பயனடைய பாடத்திட்டத்தை மாற்றனுமா? தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு சர்டிஃபிகேட் வேறு குடுத்துட்டாய்ங்க.. அதாவது மாநில பாடத்திட்டத்தை படிப்பவர்கள் மத்திய பாட திட்டத்தை விட அதிக அளவில் படிக்கறாங்கன்னு... சமச்சீர்ன்னு மூக்கு சிந்திய பீஸ்கள் காதில் விழுதா?? ஒட்டகத்தை கூடாரத்தில் வெயிலுக்கு கால் வச்சிக்க விட்டா என்ன ஆகும்கிறதுக்கு சிறந்த உதாரணம் இந்த செய்தி... அப்புறம் ஒரு ரிக்வஸ்ட்...சில பகோடாஸ் எதிர் கருத்தை திட்ட மட்டுமே அலையுதுக இங்கே... அதுகளால் செய்தி மற்றும் கருத்துக்கள் தரம் வெகுவாக பாதிக்கப்படுது... அதுக தாராளமாக பதில் கருத்து சொல்லட்டும்... இருநூறு கொத்தடிமை ஆண்டிஇன்டியன் மாதிரி பிதற்றல் இல்லாமல்... ஊதும் சங்கு ஊதியாச்சு...
மாநில பாடத்திட்டத்தை படிப்பவர்கள் மத்திய பாட திட்டத்தை விட அதிக அளவில் படிக்கறாங்களாம். அப்ப எதுக்கு நீட் தேர்வு நீட் தேர்வு என்று விடியல் மூக்கு சிந்தனும்? .போய் நீட் தேர்வு எழுத வேண்டியதுதானே ...