உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் ஏ.ஐ., ரயில்வே துறையில் பயன்படுத்த நடவடிக்கை; ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் புது தகவல்

தமிழ் ஏ.ஐ., ரயில்வே துறையில் பயன்படுத்த நடவடிக்கை; ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற 'தமிழ் ஏ.ஜ.,' தொடர்பான நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். அவர், வணக்கம்.. எப்படி இருக்கீங்க ? என தமிழில் உரையை தொடங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான மிக முக்கிய மையமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து உருவாகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை இந்தியா முழுவதுமே பயன்படுத்துவது மகிழ்ச்சி.மின்னணு பொருட்களின் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும். மின்னணு துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். இதுவே பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை. தமிழ் ஏ. ஐ., ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில செயலாளரும், தமிழ் ஏ.ஐ., திட்டத்தின் நிறுவன தலைவருமான அஸ்வத்தாமன் வரவேற்றார். தொழில்நுட்ப நிபுணர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜூன் 11, 2025 01:06

வேண்டாத வேலை. இன்னும் கொஞ்சநாளில் எடப்பாடி முதல்வர் ஆனவுடன், மும்மொழி கொள்கை தமிழகத்தில் வரும். ஐந்தே ஆண்டில், அனைத்து மக்களும் ஹிந்தியில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்துகொள்வார்கள். இந்தியா முழுக்க பல மொழிகளை போட்டு குழப்பாமல், ஒரே மொழியாக ஹிந்தி வருவது தான் வசதி. சீனா மற்றும் அமெரிக்கா வேகமாக வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஒரே மொழி பயிற்சி தான்.


chinnamanibalan
ஜூன் 10, 2025 20:57

தமிழ் செம்மொழி என்று பெருமை பேசப்படுவது மட்டும் உண்மை. ஆனால், தமிழக பள்ளிகள் அனைத்திலும் ஆரம்ப கல்வி நிலையில் கூட, தாய்மொழியான தமிழ் கற்பது கட்டாயம் என்ற நிலைமை இங்கு இல்லை.இந்த நிலையில், தமிழின் நவீன தொழில் நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்துவது குறித்து ரயில்வே துறை ஆலோசித்து வரும் செய்தி, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!


Iyer
ஜூன் 10, 2025 20:44

அப்படியே பிஜேபி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வாருங்கள்


Narayanan Muthu
ஜூன் 10, 2025 20:09

நல்லா இருந்த ரயில்வே துறையும் நாசமா போனதுதான் இவனுங்க ஆட்சி லட்சணம். நாளொரு விபத்து பொழுதொரு மரணங்கள் இதுதான் தற்போதைய ரயில்வே துறையின் சாதனை.


தமிழ்வேள்
ஜூன் 10, 2025 20:05

வைஷ்ணவ்ஜி, விஷப் பரீட்சை வேண்டாம்.திராவிஷ கும்பல் ஹேக் செய்து, டுமீலன் கோமணம் கட்டுவதை ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி வகையறாக்களால் தான்... என்று உருட்டுவார்கள்.....


Nada Rajan
ஜூன் 10, 2025 19:38

வணக்கம்!நல்லா இருக்கிறோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை