மேலும் செய்திகள்
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
02-Oct-2025
கடலுார்: கடலுார், புதுச்சேரி துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதன் காரணமாக, வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது கடலில் சென்னையில் இருந்து 990 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது, நாளை (27ம் தேதி) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உருவாகும் புயலுக்கு 'மோந்தா' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்க கடலில் புயல் உருவாகும் சூழல் இருப்பதை எச்சரிக்கும் வகையில் கடலுார் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில், நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
02-Oct-2025