உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை; அண்ணாமலை ஆவேசம்

கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை; அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவி தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில், 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.https://www.youtube.com/embed/QPQ7blWLGM0துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது. உடனடியாக, மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். மேலும், மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்துப் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Padmasridharan
ஜூலை 31, 2025 23:08

ஆசிரியர்களும் அவ்வப்போது பாடங்களை சொல்லித் தருவதுடன் மாணவர்களுக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும். தோல்விகளை எதிர்த்து தைரியமாக பெற்றோர்களிடம் விளக்க சொல்லித்தரனும் சாமி. செய்திகளில் வெற்றிகள், குற்றங்கள், விளம்பரங்கள், சினிமாக்கள் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. வளர்ந்து வரும் மாணவர்கள் இத்தகைய செய்திகளை படிப்பதில் வெற்றி ஒன்று தான் முக்கியமென்று நினைப்பதில் தோல்வியில் தைரியத்தை தொலைத்து விட்டு காணாமல் போய்விடுகின்றனர்.


K.n. Dhasarathan
ஜூலை 31, 2025 21:26

அண்ணாமலை இந்த ஆவேசத்தை தமிழகத்திற்கு கல்வி துறைக்கு வர வேண்டிய நிதியை வாங்கி கொடுங்கள், அங்கு காட்டுங்கள், சும்மா வெறும் வாயை மெல்ல கூடாது, வாங்கி கொடுத்தால் தமிழகமே கொண்டாடும்


Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:21

2026 தேர்தல் பணிகளை நாங்க செய்யவேண்டும். இந்த விஷயங்கள் எங்களுக்கு இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று. தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கலாம் என்று திமுகவினர் கூறினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.


Sambath
ஜூலை 31, 2025 18:26

கண்ட கண்ட ஊபி எல்லாம் நிறை கல்வி கற்ற அண்ணாமலை தகுதி பத்தி பேசுது. மத்திய அரசு தர வேண்டிய பணம் எவ்வளவு தெரியுமா? ஏன் தரவில்லை தெரியுமா? தந்த பணத்திறகு என்ன கணக்கு? படிப்பறிவற்ற ஊபிஸ். மானங் கெட்ட முட்டு


Vel1954 Palani
ஜூலை 31, 2025 18:15

பள்ளி கல்வி துறையில் நடந்த சம்பவத்துக்கு துறை அதிகாரிகளும் துறை சம்பந்தப்பட்ட அமைச்சரும் தான் பொறுப்பு. இது கூட தெரியாது சிலர் எதிர் கருத்து பதிவிடுகின்றனர். விடுதி காப்பாளரை முறைப்படி முன்னமேயே தண்டித்திருந்தால் இந்த தற்கொலை தடுக்கப்பட்டிருக்கலாம் .


Apposthalan samlin
ஜூலை 31, 2025 17:18

அன்பில் மகேஷை குறை சொல்ல அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது ? யோக்கியன் என்றால் ஒரு பைசா கூட தராத மத்திய ஒன்றிய அரசை கேள்வி கேட்டு போராட்டம் பண்ணு .


vivek
ஜூலை 31, 2025 18:45

சாம்பிராணி அப்போஸ்தலர்...கேட்பது தமிழக மக்கள்...பதில் சொல்லு


Mario
ஜூலை 31, 2025 16:27

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017 முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. இதில் நியமிக்கப்பட்ட 203 ஆசிரியர்களில், 202 பேர் போலி கல்வி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணிக்கு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


vivek
ஜூலை 31, 2025 16:43

லண்டனில் கள்ள குடியேறிகள் கண்டுபிடிக்கப்பட்டு விரட்டப்படுவார்கள்


கண்ணன்,மேலூர்
ஜூலை 31, 2025 17:15

அறிவாலய ஊபிஸ்கள் உடனே உபிக்கு ஓடிருவானுக


GSR
ஜூலை 31, 2025 15:15

யார் குறைவான சம்பளம் கேட்டாலும், ரெக்கமண்டேஷன் ல வந்தாலும் அரைகுறை படிப்போடு இருந்தாலும் மனோதத்துவ ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்ற நிலை இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை