உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.44.50 கோடியில் மாணவர் விடுதி: ஏப்.,14ல் திறப்பு

ரூ.44.50 கோடியில் மாணவர் விடுதி: ஏப்.,14ல் திறப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கூட்டத்தில் முதல்வர் மேலும் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின், உயர் கல்வி கனவை நனவாக்க, சென்னை நந்தனம், எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில், 10 தளங்களில், 120 அறைகளுடன், 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், புதிய விடுதி கட்டப்படுகிறது. நுாலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சிக்கூடம், உள்ளரங்கு விளையாட்டுக் கூடம் ஆகியவற்றுடன், 44.50 கோடி ரூபாயில் புதிய விடுதி கட்டப்படுகிறது. இவ்விடுதி, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ல் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்த விடுதி கட்டுமான பணிகளை, நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இவ்விடுதி கட்டடம், 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. ஏப்., 14ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதால், பணிகளை விரைவாக முடிக்கும்படி, பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை