உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையில் முடிந்த ஒருதலைக் காதல்! கல்லூரி மாணவியை கொன்றவரை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்

கொலையில் முடிந்த ஒருதலைக் காதல்! கல்லூரி மாணவியை கொன்றவரை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்

சென்னை; சென்னையில், கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா என்பவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், சத்யப்பிரியாவை ஓடிக் கொண்டிருந்த ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில் சத்யப்பிரியா உயிரிழக்க மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சதீஷ் என்பதும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவியை ஒருதலையாய் காதலித்தார் என்பதும் தெரிய வந்தது. மேலும், தம்முடன் பேச மறுத்ததால் ரயில் முன்பு அவரை தள்ளிவிட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என்பதை உறுதி செய்ய நீதிதன்றம், அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் (டிச.)30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jagan (Proud Sangi)
டிச 27, 2024 19:51

இந்த ஆள் ஒரு கழக கண்மணி என்று கேள்வி. பாக்கலாம் என்ன நடக்குதுன்னு


அப்பாவி
டிச 27, 2024 19:10

நம்ம புள்ளாண்டான். பாத்து பத்திரமா ஜெயில்ல வெச்சு சகல வசதிகளும் செஞ்சு குடுங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 27, 2024 19:05

லவ் பண்ணலேன்னா தள்ளி உட்டுருவியா ????


Sudha
டிச 27, 2024 18:15

பாவம் பத்திரிகை காரர்களுக்கே எந்த வருடம் எந்த தேதி என்று மறந்து விட்டது இவனுக்கு தண்டனை அறிவிப்புக்கு முன் பிடென் காலி, ஜகன் மோகன் ரெட்டி kaali


sankaranarayanan
டிச 27, 2024 16:49

இது கோடம்பாக்கம் சுவாதி கொலைவழக்கு போலவே இருக்கிரது முடிவும் நீதியும் அப்படியேதானிருக்கும்


Rasheel
டிச 27, 2024 16:35

ஜாமீன் வாங்கியே 45 வயது ஆகி விடும். அப்பறம், சிறையில் இருந்த காலத்தை கழித்தது போக, விடுதலை செய்ய படுவான்.


Narasimhan
டிச 27, 2024 14:27

என்னங்க எல்லோர் கண் முன்னாலேயே கொலை செய்திருக்கிறான். பத்து வருடம் இன்னும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே


ram
டிச 27, 2024 14:03

என்ன அவன் அப்பீல் ஹை கோர்ட்க்கு போவான் அங்கு இந்த வழக்கு ஒரு மூன்று டு ஐந்து வருடங்கள் நடக்கும் ஒரு வேலை அங்கு இவன் குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்கள் .


சம்பா
டிச 27, 2024 14:02

தவணை முறையில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை