மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
நாமக்கல் : 'ப.வேலூர் கந்தம் பாளையம் எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் சிலர் கோஷ்டி சேர்ந்து, பிற மாணவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்த போதும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை' என, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூர்-திருச்செங்கோடு செல்லும் சாலையில், கந்தம்பாளையத்தில் எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் 2,000க்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைவராக, துறையூரைச் சேர்ந்த சவுடாம்பிகா கல்வி நிறுவன உரிமையாளர் ராமமூர்த்தி உள்ளார். செயலராக, ப.வேலூர் பேரூராட்சி முன்னாள் சேர்மனான காங்கிரஸ் பிரமுகர் பொன்னிமணி, பொருளாளராக ஜோதி உள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆறு பேர், பள்ளியின் பங்குதாரராக உள்ளனர். வருமான வரித்துறையைச் சேர்ந்த உயரதிகாரி வேலுச்சாமி என்பவர், பள்ளி நிர்வாகிகளுக்கு, 'பக்கபலமாக' இருக்கிறார். பள்ளியில் ஒரு மாதத்திற்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவி ஒருவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஓராண்டுக்கு முன், மாணவர் ஒருவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு, பள்ளியின் நிர்வாகம் மற்றும் மாணவர்கள் கோஷ்டி சேர்ந்து, பிற மாணவர்களை கேலி, கிண்டல் செய்வது தான் காரணமாக தெரிவிக்கப்படுகிறது.பள்ளியில் தற்போது, பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவில் பயிலும் சில மாணவர்கள் கோஷ்டி சேர்ந்து, அடிதடி ரகளையில் ஈடுபடுவதாகவும், புகார் எழுந்துள்ளது. அதில் பாதிக்கப்படும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தாலும், ஒரு குறிப்பிட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அம்மாணவர் பேராவூரணியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஒருவரது செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி வருவது, பள்ளி நிர்வாகத்தின் தயக்கத்துக்குக் காரணம். மாறாக, புகார் எழுப்பும் பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டுவதாக கூறப்படுகிறது. அடாவடி செய்து வரும் மாணவரின் தந்தை, துபாயில் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து, பள்ளியின் செயலர் பொன்னிமணி தெரிவித்தாவது: பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அக்குறிப்பிட்ட மாணவர், பேராவூரணியைச் சேர்ந்தவர். அம்மாணவரும், இன்னொரு மாணவரும், பள்ளியில் ரகளை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் இருவரும் பத்து நாள்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2வில் மட்டும், 800 மாணவர்கள் வரை படிக்கின்றனர். வெளி மாவட்டம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மாணவர்களது கல்வியில் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு பொன்னிமணி தெரிவித்தார். எஸ்.கே.வி., பள்ளியில் நிலவும் பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ப.வேலூரில் உள்ள காந்தி மெமோரியல் நில அபகரிப்பு வழக்கில், பா.ம.க., முன்னாள் எம். எல்.ஏ., நெடுஞ்செழியனுடன், பள்ளியின் செயலர் பொன்னிமணி கைதாகி, ஜாமினில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39