உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாதி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை பூமிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: மதுரை திருப்பாலை யாதவா கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி. இங்கு 2024 ஜூலை 11ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தனி நபரை முன்னிலைப்படுத்தி, அவரது படம் அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணியுமாறு மாணவியர் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் 'மாவீரன் அழகுமுத்துக்கோன்,' என அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணிந்திருந்தனர். கல்லுாரி வளாகத்தில் பேனர்கள், போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு தனி நபரை புகழ்வதற்காக மாணவர்களிடம் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது. இன்று (ஜூலை 11) அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. எந்த ஒரு தனி நபரையும் ஊக்குவிக்கும் போஸ்டர்கள், பேனர்கள் இடம் பெறக்கூடாது. மாணவர்களின் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்படாதவாறு விழா நடத்த வலியுறுத்தி கல்லுாரிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர், திருப்பாலை போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெசி ஜீவப்பிரியா ஆஜரானார். கல்லுாரி தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.என்.சிவா: இன்று (ஜூலை 11) கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவில் பங்கேற்குமாறு மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது. கல்லுாரி நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்தாலும் மாணவர்களை பங்கேற்குமாறு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டாயப்படுத்தக்கூடாது. இது மாணவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்குட்பட்டது. கட்டாயப்படுத்தியது உறுதியானால் கல்லுாரிக்கு வழங்கப்படும் உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கல்லுாரி வளாகத்திற்குள் ஜாதிய அடையாளம் சார்ந்த பேனர்கள், போஸ்டர்கள் இடம்பெறக்கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கையை போலீசார் மற்றும் உயர்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 11:07

சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதி முன்னோடிகளாக சித்திரிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். காந்தி நேரு மட்டுமே சுதந்திரம் பெற்றுத் தந்ததாக பாடநூல்களில் குறிப்பிடுவதை மாற்ற இது போன்ற வீரர் அழக வீரமுத்து விழாக்கள் அவசியமே. படித்த நீதிபதிகள் இதை உணர வேண்டும்.


venugopal s
ஜூலை 11, 2025 10:43

தமிழக ஆளுநர் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும் அல்லவா?


vivek
ஜூலை 11, 2025 11:50

அது படித்தவர்கள் நடத்திய நிகழ்சி


S.V.Srinivasan
ஜூலை 11, 2025 10:26

எல்லா ஜாதி, மதங்கள் நிகழ்ச்சிகல்ன்னு அழுத்தம் திருத்தம் உத்தரவு போடுங்கள் கனம் நீபதி அவர்களே. இல்லையென்றால் ஆட்சியாளர்கள் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக அவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் ஜாதி, மதத்தை அனுமதிப்பார்கள்.


Subramanian Marappan
ஜூலை 11, 2025 08:49

இந்த உத்தரவு கிருத்துவ பள்ளிகளுக்கு பொருந்தாதா? அவர்கள் மதத்தை பிரதானமாக கொண்டு கல்வி நிலையம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் பெரும்பாலோர் அவர்கள் மதத்தை சார்ந்தவர்கள். சிலர் மத அடையாள உடைகளை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.பள்ளியை ஒட்டியோ பள்ளிக்கு உள்ளேயோ தேவாலயம் இருக்கும். பைபிள் படிக்க சொல்லி மாணவர்கள் கட்டாயப்படுத்த படுகின்றனர். மதமாற்ற முயற்சி குழந்தைகள் மீது நடைபெறுகிறது. இது அரசு நிதி உதவியுடன் நடக்கும் பள்ளிகளில் உண்டு. எந்த கல்வி அதிகாரியும் இதுபற்றி புகார் தர மாட்டார்கள். இதற்கு நீதிமன்ற அனுமதி உண்டா? அரசியல் கட்சிகள் மாணவரணி என்று வைத்துக் கொண்டு கல்லூரி வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி நீதிமன்றம் வழங்கி உள்ளதா?


Muralidharan raghavan
ஜூலை 11, 2025 09:51

நியாயமான கேள்வி


கோபாலன்
ஜூலை 11, 2025 07:44

என்ன இது புதிய கட்டுப்பாடு? கால்டுவெல் திராவிட கூட்ட ஜாதி அடிப்படையில் தான் கல்வி, வேலை வாய்ப்பு, போலி சமூக நீதி, ஜாதி கட்சிகள் ஆகியவை கட்டமைக்க பட்டுள்ளது. ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் இங்கு ஏராளம். இந்த நிலையில் நீதி மன்றம் வழங்கும் அறிவுரை எப்படி சாத்தியம் ஆகும்


SRIDHAAR.R
ஜூலை 11, 2025 07:15

அரசியல் தலைவர்கள் பங்கேற்று நடத்தும் அரசு விழாவாக இருந்தாலும் மாணவ மாணவிகள் பங்கேற்க தடை செய்யவேண்டும்


சமீபத்திய செய்தி