உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்,” என, தமிழக பா.ஜ., தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை கூறினார்.'தினமலர்' நாளிதழும், 'வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன்' நிறுவனமும் இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தின.அதில், 'அரசு பணி சாத்தியமே' என்ற தலைப்பில், அண்ணாமலை பேசியதாவது: 'தினமலர்' நடத்தும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, தமிழக அளவில் மிக முக்கியமானது. அரசு பணியில் சேர வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், நாட்டின் முன்னேற்றத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகள்

ஓர் இலக்கை அடைய வேண்டுமானால், அதற்கான முயற்சியை, ஒரு இடத்தில் துவங்க வேண்டும். 'தினமலர்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள், சிவில் சர்வீசஸ் முயற்சியை துவக்கி இருக்கின்றனர். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், மூன்று மாதம் படித்தபோது, அங்குள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கானது. இந்த காலகட்டத்தில் சீனா, ஜப்பானை போல, இந்தியாவும் வளரப் போகிறது. வளரும் நாடு என்பதிலிருந்து, வளர்ச்சி அடைந்த நாடு என்ற மாற்றத்தில், இந்தியா அடியெடுத்து வைக்கும்போது, இன்றைய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர இருக்கின்றனர்; இதுவொரு அரிய வாய்ப்பு.கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சர்வீசஸ் மீதான கனவு, இளைஞர்களுக்கு அழியாமல் இருந்து வருகிறது. இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வருகிறது; 4 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தொட்டிருக்கிறோம். மத்தியில் நிலையான ஆட்சி இருப்பதே இதற்கு காரணம். உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளன.ஒரு காலத்தில், 'ஐ.ஏ.எஸ்., ஆகிவிட்டால் போதும்; 35 ஆண்டுகள் யாரும் கேள்வி கேட்க முடியாது' என்ற நிலை இருந்தது. இப்போது சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், தினமும் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஏதாவது துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விருப்பு, வெறுப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள், முழுதுமாக நாட்டுக்கு தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். விருப்பு, வெறுப்பு என்பதே இருக்கக் கூடாது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என, இந்தியாவின் எந்த பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். சொந்த மாநிலத்தில்தான் பணியாற்றுவேன் என்ற மனநிலையில் இருந்தால், தேர்வுக்கு தயாராவதிலேயே, 20 சதவீதம் அளவுக்கு தேக்க நிலை ஏற்படும்.'எதையும் கிரகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டால், எதுவுமே சாத்தியமே' என ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளதை, அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு, தோல்வி என்பதே கிடையாது.

அறிவுத் திறன்

வென்றால் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள் கிடைக்கும். இல்லையெனில், பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எங்கேயும் கிடைக்காத அறிவுத் திறன், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும்போது கிடைக்கும். எனவே, கவலைப்படாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமா என்று பலரும் கேட்கின்றனர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், கண்டிப்பாக வெற்றி பெற முடியும். தன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், எதிலும் வெற்றி பெற முடியாது.இந்த தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அதற்கு முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும். உறவினர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட செல்லாமல், முழு கவனமும் சிவில் சர்வீசஸ் தேர்வில் மட்டுமே இருக்க வேண்டும்.எதற்கெல்லாம் மதிப்பெண் கிடைக்காதோ, அந்த விஷயங்களில் ஈடுபடவே கூடாது. 24 மணி நேரத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.அரசு பணிக்கு வந்து விட்டால், 35 ஆண்டுகள் என்ன செய்ய போகிறீர்களோ, அதைத்தான் தேர்வுக்கு தயாராகும்போது கற்றுக் கொள்கிறீர்கள். இதை புரிந்து படிக்க வேண்டும். எதிர்மறையாக சிந்திக்காமல், 'என்னால் முடியும்' என்று நம்புங்கள். இதையெல்லாம் செய்தால் அரசுப் பணி சாத்தியமே.

300க்கு 240

கடந்த 2008 நவ., 26ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தான், எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. லக்னோ ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்கும்போது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, ஐ.பி.எஸ்., ஆக தேர்வானேன்.நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, வாஜிராம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குனர் ரவீந்திரன், எனக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தினார்.'உங்களது உண்மையான இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள். நேர்முகத் தேர்வில், 300க்கு 210 மதிப்பெண் கிடைக்கும்' என்று, எனக்கு அறிவுரை வழங்கினார். அவரது இந்த சொற்கள், எனக்கு பெரும் ஊக்கமளித்தன. அதனால், 300க்கு 240 மதிப்பெண் பெற்று, ஐ.பி.எஸ்., தேர்வானேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

AMLA ASOKAN
டிச 15, 2024 23:51

மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வராமல் IPS படித்து தேர்வாகி பின் தன்னை போல் அரசியலுக்கு வரச் சொல்லுகிறாரா ? பின் எதற்கு அண்ணாமலையின் அறிவுரைப்படி கஷ்டப்பட்டு இந்த தேர்வை எழுத வேண்டும் ?


Siva Subramaniam
டிச 15, 2024 19:43

Ever since 1967, many facts about History of Tamil Nadu is changing. Mr. Annamalai, should try and bring back facts about real history and convey to the present generation. This means, half of the population has NO idea about what was happening before 1967.


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 16:05

முட்டு குடுக்கறது ன்னா என்ன? ஐ டி யே அபத்தமா இருக்கு. 2011-21 திமுக ஆட்சியில் இல்லாததுக்கும், என் கருத்துக்கும் என்ன புண்ணாக்கு சம்பந்தம்???


ghee
டிச 15, 2024 23:29

ஏல வைகுண்டம், அண்ணாமலை ஒரு தேர்தலில் தோற்றார் உண்மை...நீ முட்டு குடுக்கும் கட்சியும் பல வருடம் தோற்ற கட்சிதான்....


ghee
டிச 15, 2024 15:03

ஆமாம் நம்ம துண்டு சீட் முதல்வரை பாத்து கத்துகொங்க அப்படினு கொத்தடிமை பற்றாளன் சொல்றாரு


பல்லவி
டிச 15, 2024 14:50

அயல்நாட்டு மோகம் அர்ப்பணிப்பு பற்றி பேச தகுதி வேணும்


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 14:16

அப்புறம் எதுக்கு அரவாக்குறிச்சி யிலும் கோவையிலும் தோத்துப் போனீர் ?


ghee
டிச 15, 2024 15:01

அறிவிலி வைகுண்டம். நீ முட்டு குடுக்கும் கட்சியும் 2011-2021 ஆட்சியில் இல்லாமல் தான் இருந்தது...சிந்தித்து கருத்து போடு


M Ramachandran
டிச 15, 2024 13:39

என்னய்யா நீங்கள் கூறுவது இந்த காலத்திற்கு ஓவ்வதது. ஊழல் செய் மாட்டிக்கொள்வதே. லஞ்சம் மென்பது தாரக மந்திரம். எதிர்பவரை ... காரணம் கூறி போலீசைய்ய ஏவி உள்ளே போடு. நீதி மந்திரமா காவலை கொள்ளதென. காசு பாக்கும் எந்த கட்சி சேர்ந்த வாய்தா வாங்கும் அதில் வல்லமைய்ய உள்ள வக்கீலய் அமார்த்திக்கோ அப்புறம் என்ன கவலை இல்லா தா மனிதன் தான்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 15, 2024 12:21

நெகடிவ் ஆகி ரொம்ப வருஷம் ஆகுது உள்ளூரில் அரவக்குறிச்சியில் தோற்கிகிற அசலூரில் கோவையில் தோற்கிற அப்புறம் நீ எங்கு தான் ஜெய்ப்ப நீ என்னவோ SPL ஆ படிக்கச் போன என்று பார்த்தாள் இந்தியாவில் இருந்து உன் இல் ஐஸ்79 பேர் சென்று இருக்கிறார்கள் இதில் உனக்கு பெருமை வேறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை