‘வெற்றி பயணம்’ பஸ்களில்
‘வெற்றி பயணம்’ பஸ்களில் பணிபுரிவோருக்கு இரட்டிப்பு படி சென்னை: ‘வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, இரட்டிப்பு படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என, போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பஸ்களை நிறுத்தங்களில் முறையாக நிறுத்தி, பயணியரை பாதுகாப்பாக ஏற்றி செல்லவும், இறக்கி விடவும் வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பெறப்படும் புகார்கள், மனுக்கள் குறித்து, கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் கவனத்துக்கு எடுத்து சென்று, உடனடியாக நட வ டிக்கை எடுக்க வேண்டும். ‘வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இரட்டிப்பு படி வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.