மேலும் செய்திகள்
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
5 hour(s) ago | 27
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
6 hour(s) ago | 8
சென்னை:முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால், அவருடைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடி தலைமையில் நடந்த திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.ஒரே நாளில் திருச்சி சென்று திரும்பிய ஸ்டாலினுக்கு, நேற்று காலை முதல் உடல் சோர்வு அதிகரித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் ஓய்வு எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.இதனால், நேற்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம், ஏற்பாடு செய்திருந்த, 47வது புத்தக கண்காட்சி துவக்க விழாவில், முதல்வரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு பதிலாக, அமைச்சர் உதயநிதி பங்கேற்று, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.
5 hour(s) ago | 27
6 hour(s) ago | 8