மேலும் செய்திகள்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
09-Apr-2026
சென்னை; 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 14 வரை, வெயிலின் தாக்கம் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தின் வட மாவட்டங்களின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். சில இடங் களில், இன்று முதல் 14 வரை, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
09-Apr-2026