உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் பெற சூப்பர் ஆப்

ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் பெற சூப்பர் ஆப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், 'சூப்பர் ஆப்' அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இது தவிர, சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என, தனித்தனியாக செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் உபயோகிப்பாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரயில்வேயின் அனைத்து சேவைகளையும், ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில், 'சூப்பர் ஆப்' எனும் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இதில் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். டிக்கெட் ரத்து செய்த அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும் பெற உதவும். பி.என்.ஆர்., சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர், விமான டிக்கெட் முன்பதிவு, ஓய்வு அறைகள், கால்டாக்சி முன்பதிவு வசதிகளையும் பெறலாம். இதேபோல், சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும். இந்த மொபைல் போன் செயலி உருவாக்கம், இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களில் இந்த செயலி அறிமுகம் செய்யப்படும். இது பயன்பாட்டிற்கு வரும்போது, பயணியர் அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் எளிதில் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 03, 2024 09:41

முதலில் தேவையான ரயில்களை இயக்குங்கள் அப்புறம் செயலி வரட்டும். சாமானிய ஏழை எளிய மக்கள் ஒவ்வொருமுறையும் சொந்த ஊருக்கு சென்று வருவது எவ்வளவு சிரமம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அரசியல்வியாதிகள் மட்டும் சொகுசாக சென்று வருவதால் அவர்களுக்கு மக்களின் வலி தெரியாது. தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்களை இயக்க வேண்டும். ஆனால், பல்வேறு தேவையற்ற காரணங்களை கூறி இழுத்தடித்து வருகிறார்கள். மோடிஜி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வாரா?


hari
அக் 03, 2024 14:52

ரயிலில் போகிறவர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறாராகள்... ஷேர் ஆட்டோவில் போகும் உனக்கென்ன கவலை நக்கீரா.... நன்றாக கண்ணை திறந்து பாருமைய்ய


Rajan
அக் 03, 2024 08:51

IRCTC is a monopoly. No one is interested in opposing it


நிக்கோல்தாம்சன்
அக் 03, 2024 07:09

UTS என்னும் ஆப் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதே , அது நீங்க சொல்லும் எல்லா வேலைகளையும் செய்கிறதே


சமீபத்திய செய்தி