வாசகர்கள் கருத்துகள் ( 1 )
லஞ்சம் வாங்காமல் வேலை செய்றீங்களா
சென்னை : 'தினமும் அலுவலகம் வர வேண்டும்' என்ற தாசில்தார்களின் உத்தரவுக்கு, நில அளவை களப்பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, தமிழக நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு, சென்னை மாவட்ட செயலர் பார்த்திபன், சென்னை கலெக்டருக்கு அளித்த மனு: நிலம் சார்ந்த களப்பணி செய்யும் பணியாளர்களுக்கு, அலுவலக பணியாளர்களை போல், தினமும் காலை 10:00 மணிக்கு, அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் நடைமுறை இல்லை.அலுவலகம் வருவதை நடைமுறைப்படுத்தினால், நில அளவை பணி பெரிதும் பாதிக்கும். களப்பணியாளர்கள் தன் பணி நேரம் முழுதும், புலத்தில் செலவிடுகிற வகையில் உள்ளது.நிலம் மற்றும் நில அளவை பிரச்னைகள் தொடர்பாக, திங்கள் கிழமைதோறும், மக்கள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 3:00 மணி முதல் அலுவலகத்தில் ஆஜராகி மக்களை சந்தித்தால், நிலம் சார்ந்த பணிகள் பெரிதும் பாதிப்படையும்.விரைந்து பட்டா வழங்கும் திட்டங்களில், நில அளவை களப் பணியாளர்கள், காலம் நேரம் பாராமல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், தாசில்தார்களின் ஒருதலைபட்சமான உத்தரவுகள், களப்பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தாசில்தார்களின் உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்காமல் வேலை செய்றீங்களா