உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது

திருப்பத்துார் : ஈமச்சடங்கு பணம் வழங்க, 2,000 ரூபாய் லஞ்ச பெற்ற தனி தாசில்தாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்தவர் மலர், 60. இவர், ஒரு மாதத்திற்கு முன், வயது முதிர்வு காரணமாக இறந்தார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு, ஈமச்சடங்கு செலவிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 25,000 ரூபாய் பெறுவதற்கு, மலரின் மகன் சேகர், 40, நாட்றம்பள்ளி தனி தாசில்தார் வள்ளியம்மாளை அணுகினார். அதற்கு அவர், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார். இது குறித்து திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் சேகர் புகார் செய்தார்.இன்று(நவ.,18), நாட்றம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், தனி தாசில்தார் வள்ளியம்மாளிடம், சேகர், 2,000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், வள்ளியம்மாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
நவ 19, 2025 03:06

Eனப்பிறவி வள்ளியம்மா


rama adhavan
நவ 19, 2025 00:02

வேலைக்கே இப்போ சங்கு உதிவிட்டது. இனி கோர்ட்க்கு நடை பிணமாக நடக்க வேண்டும். சமூகத்திலும் மதிப்பு போச்சு. இறைவன் இருக்கிறான் குமாரு.


naadodi
நவ 19, 2025 00:00

கேவலமான ஈன ஜென்மம்


சாமானியன்
நவ 18, 2025 22:51

பாங்க் அக்கவுண்ட்டிற்கு பணம் அனுப்ப அரசாங்கம் வழிவகை செய்திருக்கே.


Shankar
நவ 18, 2025 22:26

எவ்வளவு கேவலமான மனிதர்களாக இருக்கிறார்கள். இதுல கூடவா லஞ்சம். இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்.


Nathansamwi
நவ 18, 2025 21:54

ஈன பெண் பிறவி ...


KRISHNAN R
நவ 18, 2025 21:33

சங்கு ஊ துவதிலும்..... சங்கு


Easwar Kamal
நவ 18, 2025 21:23

2000 ருபாய் வாங்கின தாசில்தரை கையுது செய்ய முடியும் ஆனால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சரை நெருங்க கூட முடிய வில்லை.


rama adhavan
நவ 18, 2025 23:56

அதுக்குதான் சய்பால் போன்ற வக்கீல்கள் உள்ளனரே.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை