உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஏ.ஓ.,க்களுக்கு கைகூடாத தாசில்தார் பதவி; பதவி உயர்வு விகிதாசாரத்தை மாற்ற வலியுறுத்தல்

வி.ஏ.ஓ.,க்களுக்கு கைகூடாத தாசில்தார் பதவி; பதவி உயர்வு விகிதாசாரத்தை மாற்ற வலியுறுத்தல்

மதுரை: 'வருவாய்த்துறையில் ஒரே கல்வித்தகுதியில் பணிநியமனம் பெற்றும், இளநிலை உதவியாளர்களுக்கும் தங்களுக்கும் பதவி உயர்வில் பாரபட்சம் உள்ளதால், தாசில்தார் கனவு நனவாகாமலேயே போய்விடுகிறது'' என வி.ஏ.ஓ.,க்கள் வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 4 தேர்வு மூலம் வருவாய்த்துறைக்கு வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே கல்வித்தகுதி, ஒரே ஊதியத்தில் பணிநியமனம் பெறுகின்றனர்.இருப்பினும் பதவி உயர்வில் பாரபட்சமான நிலைமை உள்ளதால் வி.ஏ.ஓ.,க்கள் தாசில்தார் பதவியை அடையமுடியாமல் தவிப்பில் உள்ளனர். அதேசமயம் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் விரைவான பதவி உயர்வால் தாசில்தார், துணை கலெக்டர் நிலை வரை உயர்ந்து விடுகின்றனர்.

பாரபட்சமான பதவி உயர்வு

வருவாய்த்துறையில் மாநில அளவில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பில் 70 சதவீதமும், அதேசமயம் 12 ஆயிரத்து 500 வி.ஏ.ஓ.,க்களுக்கு 30 சதவீதமும் வழங்கப்படுகிறது.இந்த கூடுதல் வாய்ப்பால் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 2, 3 ஆண்டுகளிலேயே முதுநிலை வருவாய் ஆய்வாளர் தகுதியைப் பெற்று, அடுத்த 10 ஆண்டுகளில் துணைத்தாசில்தார், தாசில்தார் நிலைக்கு வந்து, அதன்பின் சிலர் துணை கலெக்டராகவும் ஆகிவிடுகின்றனர்.ஆனால் வி.ஏ.ஓ.,க்கள் அடுத்த நிலையான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வை 12 ஆண்டுகளுக்குப் பின்பே எட்டுகின்றனர். அதன்பின் ஒவ்வொரு நிலையையும் தாண்டி, ஓய்வு வயதுக்குள் தாசில்தார் பதவியை பெற முடியாமல் போகிறது.வருவாய்த்துறை சங்கங் களின் கூட்டமைப்பு தீர்மானக்குழு தலைவர் ஜெயகணேஷ் கூறுகையில், ''பதவி உயர்வில் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாசாரம் அமைய வேண்டும்.அதிக எண்ணிக்கையில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு 70 சதவீதமும், இளநிலை உதவியாளர்களுக்கு 30 சவீதமும் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் வி.ஏ.ஓ.,க்களுக்கும் கீழான நிலையில் உள்ள பதிவுரு எழுத்தர்கள் கூட (ரெக்கார்டு கிளர்க்) தாசில்தார் ஆகிவிடுகின்றனர்.இந்த நிலையை தவிர்க்க வி.ஏ.ஓ.,க்களையும் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுடன் ஒருங்கிணைத்து பணிமூப்பு வழங்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Poopandi M
ஏப் 12, 2025 14:41

அதே கல்வி தரத்தில் காவலராக பணிக்கு சேர்ந்து 25 வருடம் கழித்துசாதாரன சார்பு ஆய்வாளர் கூட கிடைக்காமல் சிறப்பு சார்பு இய்வாளராகவே பணி ஓய்வு பெறும் காவல்துறையினரை விட நீங்கள் எவ்வளவோ மேல் தான் சார்.....


Bhaskaran
ஏப் 11, 2025 20:53

தினம் தினம் காசு பார்க்கும் இவங்க பதவிஉயர்வு வேண்டும் என்று ஆசைப்படறாங்களா வியப்பாக உள்ளது


Karunagaran
ஏப் 11, 2025 15:10

1923 முதல் 1947 1982 வரை 8 ஆம் வகுப்பு பாஸ் செய்து அலுவலக பதிவை எழுத்தர் உதவியாளர் ஆர்ஐ டிடி துணை தாசில்தார் தாசில்தார் பதவியில் பணி செய்து டி என்பிசி கட்டத்தில் மை தடவி பணியில் செர்ந்த சில தாசில்தார் அதிகாரிகள் பணி களப்பணி அனுபவம் மக்களிடம் பழக தெரியாத வேலை தெரியாத செய்யாத திட்டமிடல் தெரியாத நிலையில் பதவியில் சேர்ந்த பின் மனு மீது நடவடிக்கை பதில் அளிக்க தெரியாமல் அரசுக்கு கெட்ட பெயர்.வீஏஓ தாசில்தார் பதவி உயர்வு நீதிமன்ற பயிற்சி வீஏஓ சர்வேயர்களுக்கு வழங்கி பதவி வட்டாட்சியர் பதவி செய்யான் அடிப்படையில் கடுமையான சட்டம் விதி நிர்ணயம் சர்வே மேனுவல் 1 முதல் 21 வரை நில ஆர்ஜிதம நில எடுப்பு பயிற்சி அளிக்க பின் தாசில்தார் பதவி வழங்க முடியும் வேண்டும் என்று தெரிகிறது


Chandrasekaran
ஏப் 11, 2025 10:41

வருவாய்த் துறையில வேறுபாடுகள் இருக்கலாம். முதுநிலைப் பட்டியலில் பிரிவினை இருக்க வேண்டும். கல்வி அடிப்படையில் பணி முப்பு பட்டியல் மேலும் நேரிடை பதவி ஒதுக்கீடு என்பது தொடர்பாக நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்புது பதவி உயர்விலும் ஓதுக்கீடைப் பின்பற்ற வேண்டும் என்றால் சமூக நீதி கேள்விக்குறியாககும் நிலை. உச்ச நீதிமன்றம் பணியமர்த்துதலில் மட்டுமே ஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை வழஙக வேண்டும் தீர்ப்பளித்தது.


nedumaran k
ஏப் 10, 2025 21:43

சரியான கேள்வி இதை அரசுக்கு கொண்டு செல்லும் பட்சத்தில் நல்ல முடிவை எட்ட வேண்டும் இதற்கான ஆயத்த வேலைகளை இப்பொழுதுதான் தொடங்கியுள்ளார்கள் அவர்களுக்கு நன்றி மேலும் 2008இல் பதவிக்கு வந்தவர்களில் விஏஓக்களுக்கும் விஏஓக்களாக இருந்து பதவி உயர்வில் சென்ற அதே ஆண்டு பணியில் சேர்ந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கும் சம்பள வித்தியாசமும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை விட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் 10 ஆண்டு முடித்த பிறகு அவர்களுக்கு ஸ்பெஷல் கிரேட் கொடுத்து உள்ளார்கள் பதவி உயர்வில் சென்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அக்கவுண்ட் டெஸ்ட் மற்றும் பதவி உயர்வுக்கு என இரண்டு இங்க்ரிமென்ட் கொடுத்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ள சம்பளம் கூட கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய இழப்பாக உள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இதற்கு ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை