உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு

திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் இளைஞர் அணி, திமுக 75 அறிவுத் திருவிழா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (நவ.8) நடந்தது. நிகழ்ச்சியை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், உதயநிதியை வெகுவாக பாராட்டினார். அவர் பேசியதாவது;ஒரு கட்சி ஆரம்பித்தால் பல கொள்கைகளை சொல்வார்கள். அந்த கொள்கைகளை நிறைவேற்ற கட்சி வேலை செய்யும். ஆனால் சில நேரங்களில் கட்சிகளின் கொள்கைகளில் கூட சமரசம் ஏற்படுவது உண்டு. ஆனால் உயிர்க் கொள்கைகளுக்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.திமுகவை பொறுத்தவரையில், அரசியலில் சமரசங்கள் ஏற்பட்டாலும் உயிர்க் கொள்கையான ஹிந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இவைகள் எல்லாம் நாம் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை. இந்த இயக்கத்தை ஆரம்பித்து 67ல் ஆட்சியை பிடித்து, அதை கருணாநிதி கையில் அண்ணாதுரை ஒப்படைத்துவிட்டு போனார். அவர் மிக வேகமாக, அற்புதமாக இந்த நாட்டை ஆண்டார், இயக்கத்தை கட்டிக் காத்தார்.அந்த தலைவரும் மறைகிற பொழுது, ஸ்டாலினை கூப்பிட்டு என் பாதையில் நட என்று அறிவுறுத்தி கட்சியை ஒப்படைத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் கருணாநிதியுடன் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவன். ஸ்டாலினை இளம்பிராயத்தில் இருந்து அறிந்தவன்.நானே இன்றைக்கு வியக்கிற அளவுக்கு, போற்றுகிற அளவுக்கு, சல்யூட் அடிக்கிற அளவுக்கு அவர் தமது பணியை ஆற்றுவதை பார்த்து மெத்த பெருமைப்படுகிறேன். ஏன் என்றால் கருணாநிதியிடம் பணியாற்றியவர். அவரிடம் கற்றவர்.அதே போன்று, அடுத்து இருக்கிற உதயநிதி, அந்த இடத்திற்கு நிச்சயமாக, சத்தியமாக, ஒரு காலத்திற்கு வருவார். அப்படி வருகிற பொழுது, கருணாநிதி, ஸ்டாலின் பெரும் பேரும் புகழைவிட அதிகமாக பேரும், புகழும் பெறக்கூடியவர் என் தம்பி உதயநிதி. நான் என்ன ஜோசியக்காரனா...இல்லை. இந்த வார்த்தையை ஒரு காலத்தில் கருணாநிதி என்னிடத்திலே சொன்னார். என்னையே மிஞ்சிடுவார் ஸ்டாலின் என்று சொன்னார். இது ஸ்டாலின், உதயநிதிக்கு தெரியும்... இதை நான் நீண்ட நெடுங்காலமாக சொல்லி வருகிறேன். காரணம்... இந்த இயக்கத்தை அழியாமல் காக்க வேண்டும். வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு எதிர்ப்பு கிடையாது. நமக்கு மட்டும்தான் எதிர்ப்பு. தமிழைச் சொன்னால் எதிர்ப்பு, தன்மானத்தை சொன்னால் எதிர்ப்பு, சுயமரியாதையை கேட்டால் எதிர்ப்பு, மாநில சுயாட்சியை கேட்டால் எதிர்ப்பு. ஆக எதை கேட்டாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி கையிலே ஆட்சியை வைத்துக் கொண்டு நடத்தி வருகிறோம்.உதயநிதியை சொல்வேன், ராஜராஜனுக்கு பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜன் மன்னனாக இருக்கிற பொழுது, அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக் கொண்டான். தாய்லாந்து வரையிலே தனது ஆட்சியை நிறுவிக்காட்டியவன். இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... உதயநிதி ஒருநாள் அத்தகைய ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதை செய்தாலும் உதயநிதி சரியாக செய்கிறார். இனி இந்த இயக்கத்துக்கு அழிவில்லை. கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிற உதயநிதி, இனிமேல் கட்சியை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Venkat esh
நவ 08, 2025 22:51

ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது..... சூது கவ்வும்


Gp
நவ 08, 2025 22:30

Nijathil valum kattappan ivar. Illa vaeru oruvar katchiku thalaivar aaga mudiyuma? Mudiyathula idhu vanja pugaltchi madhiriyum theriyudhu


duruvasar
நவ 08, 2025 21:55

உதயநிதிக்கு பின் இன்பநிதிதான். கதிர் ஆனந்தின் மகனையும் ரெடி பண்ண சொல்லுங்கள்


M Ramachandran
நவ 08, 2025 21:20

தீ மு காவின் pafoon.


Sun
நவ 08, 2025 21:19

மாமன்னன் ராஜேந்திர சோழன் தாய்லாந்தை எல்லாம் பல மடங்கு தாண்டி மலேஷியா, இந்தோனேசியா வரை தனது புலிக் கொடியை நாட்டிய ஒரே ஒரு தமிழ் சக்கரவர்த்தி. துரை முருகன் அண்ணனுக்கு அது தெரியாமல் இருக்காது! இன்று மலேசியாவும், இந்தோனேசியாவும் இஸ்லாமிய நாடுகள் .மலேசியா, இந்தோனேசியா எனும் இன்றைய இஸ்லாமிய நாடுகளை ராஜேந்திர சோழன் எனும் தமிழ் மன்னன் வென்றான் என தான் சொன்னால் ஒருவேளை தங்களது இஸ்லாமிய வாக்கு வங்கிக்கு பங்கம் வந்து விடும் என நினைத்து ராஜேந்திரனின் வெற்றியை அண்ணன் தாய்லாந்துடன் நிறுத்தி விட்டாரோ என்னவோ?


Gokul Krishnan
நவ 08, 2025 20:42

அமைதிப்படை படத்தில் சத்யராஜ் அரசியல்வாதி ஆகி பதவி வந்த பின் ஆற்றில் குளித்து விட்டு அவரது உள்ளாடையை கழட்டி எறிவார் அதை துவைக்க எடுப்பதற்கு மணிவண்ணன் மற்றும் இன்னொருவர் போட்டி போடுவார் . அந்த காட்சியை இப்போது பார்த்த மாதிரி இருக்கிறது


Priyan Vadanad
நவ 08, 2025 22:19

சூ சூ சூப்பர் கமெண்ட். ஒரு திராவிடம் தவழ்தல். இன்னொரு திராவிடம் இதுமாதிரி.


panneer selvam
நவ 08, 2025 20:38

Durai muruagan ji is a Kalaingar s slave so his family has to be slaves of Kalaingar family . Slaves do not have any option except to be slaves of their master in generation


vbs manian
நவ 08, 2025 20:28

உலக மகா குடும்ப விசுவாசம் அடிமை சாசனம்.


KRISHNAN R
நவ 08, 2025 20:13

அடிச்சாலும் இப்படி ஒரு அப்பயின்ட்மென்ட் ஆர்டர் யாரும் அடிக்க முடியாது


ganesan
நவ 08, 2025 19:59

பாவம் செய்தால் 3 வது தலைமுறை அழியும் என்பது தர்மத்தின் வாக்கு , பார்ப்போம்


முக்கிய வீடியோ