உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாசிசம், பாயாசம் பேசுவது சினிமா வசனம் போல் உள்ளது

பாசிசம், பாயாசம் பேசுவது சினிமா வசனம் போல் உள்ளது

நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். புதிய கட்சியின் கோட்பாடாக, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று கூறி இருக்கிறார். அந்த கட்சி வரக் கூடிய நாட்களில் தமது கொள்கைகளை சொல்லும். அதன்பின்பே, கட்சி குறித்து எதையும் சொல்ல முடியும். ஆனால், நடிகர் விஜய் காங்கிரசின் சில கொள்கைகளை வலியுறுத்தியுறுத்தி பேசியது மகிழ்ச்சி. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிப்போம் என நடிகர் விஜய் கூறியுள்ளார். இதெல்லாம் சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்பதை தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும். ஒரு காலத்தில் மத்திய அரசில் தனிக்கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. ஆனால், மத்திய அரசில் 1996க்கு பின், பல கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆக, சாத்தியம் இல்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகலாம். நடிகர் பாசிசம், பாயாசம் என்று பேசுவது சினிமா வசனம் போல் உள்ளது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ளாக் கூடாது. ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை