உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - திருவனந்தபுரம் ஏசி சிறப்பு ரயில் நீட்டிப்பு

தாம்பரம் - திருவனந்தபுரம் ஏசி சிறப்பு ரயில் நீட்டிப்பு

சென்னை:தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும், 'ஏசி' சிறப்பு ரயில் சேவை, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:தாம்பரத்தில் இருந்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு புறப்படும், 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு, திருவனந்தபுரம் வடக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில், நாளை ஒரு நாள் நீட்டித்து இயக்கப்படுகிறது.இதேபோல், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வாரந்தோறும் ஞாயிறு மாலை 3:25 மணிக்கு புறப்படும் 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:40 மணிக்கு, தாம்பரம் வரும். இந்த ரயில் சேவை வரும் 15ம் தேதி ஒரு நாள் நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில், முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை