உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை

தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.சென்னை - செங்கல்பட்டு ரயில் பாதை, தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக இருக்கிறது. இவற்றில், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பயணியர் சென்று வருகின்றனர். பயணியர் தேவைக்கு, புறநகர் மின்சார ரயில் இயக்கம் இல்லை. கூடுதல் ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது, மூன்று பாதைகள் உள்ளன. போதிய ரயில் பாதை இல்லாததால், ரயில் சேவை அதிகரிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புது பாதையை, ரயில்வேயுடன் இணைந்து அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. அதன்படி, இந்த திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநில அரசுகள், ரயில்வேயுடன் இணைந்து, திட்டப்பணிகளை நிறைவேற்றுகின்றன.அந்த வகையில், தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், புறநகர் பயணியருக்கான சேவையை வழங்க, இந்த திட்டப்பணி மேற்கொள்ள உள்ளது.அதன்படி, 1,165 கோடி ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்த, டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். இதற்கான அறிவிப்பை, ரயில்வே வாரியம் வெளியிடும்.அதன்பின், போதிய நிலங்களை கையகப்படுத்தி, ரயில் பாதை பணிகளை மேற்கொள்வோம். இந்த புதிய பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் ரயில்கள் தேவை

இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள், புறநகர் மின்சார ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.தேவை அதிகரித்ததால் தான், தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே மூன்றாவது பாதை அமைக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த பிறகும், கூடுதல் மின்சார ரயில்களை ரயில்வே இயக்கவில்லை. 15 சதவீதம் ரயில் சேவையை அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை.கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தமிழ்வேள்
பிப் 02, 2025 21:50

சென்னை சுபர்பன் ரயில் குறைந்த பட்ச கட்டணத்தை பத்து ரூபாய் ஆக அதிகரிக்க வேண்டும்.. தாம்பரம் மாம்பலம் இடையே வெறும் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டுமே..ஆனால் இதே தொலைவுக்கு மாநகர பேருந்து கட்டணம் 35 ரூபாய்..35 ரூபாய் கொடுத்தும் கூட்டம் பிதுங்கி வழிகிறது என்னும் போது ரயில் கட்டணம் மினிமம் பத்து ரூபாய் என்று வைத்தால் கூட அதுவும் மிகக்குறைவே.... சென்னை காரனால் மினிமம் பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாதா என்ன?


Karunanithi Munuswamy
பிப் 02, 2025 07:16

இது முக்கியத்துவம் வாய்ந்த செயல் உடனே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டுகிறேன்


M Ramachandran
பிப் 01, 2025 13:16

இப்போது உள்ள 3 வது ரயில் பாதைய்ய சரியாக திட்டமிட பட வில்லை. ரயிலுக்கும் பிரிட்ஜ்ஜின் தூணுக்கும் இடை வெளி மிக குறைவாக உள்ளது. அதனால் பரனுர் ஓவர் பிரிட்ஜினால் மின்சார ரயில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் தான் கடந்து செல்கிறது.


M Ramachandran
பிப் 01, 2025 13:11

பரனுர் ரோட் ஓவர் பிரிட்ஜ் தான் ப்ராபளம்


வெங்கடேஷ்
பிப் 01, 2025 13:11

முதலில் தாம்பரம் ஸ்ட்டேஷனில் 7,8,9,10 பிளாட்பாரம் களுக்கு escalator வசதி செய்து கொடுக்கவும். தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.


Saai Sundharamurthy AVK
பிப் 01, 2025 11:48

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, யோகா மருத்துவமனை என்று அங்கெல்லாம் செல்வதற்காக இருந்த ஒரு ரயில் நிலையம் காணாமல் போய் விட்டது. ரயில்வே வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


செல்வகுமார், குடந்தை
பிப் 01, 2025 11:28

நில ஆர்ஜிதம் செய்யவே இருபது ஆண்டுகள் ஆகிவிடும்


தத்வமசி
பிப் 01, 2025 09:42

வரவேற்க வேண்டிய திட்டம். இந்த நான்காவது பாதையை மிக விரைவில் தொடங்கி முடித்திடல் வேண்டும். மூன்றாவது பாதையை சரிவர பயன்படுத்துவது இல்லை. காலையில் மூன்றாம் நடைமேடையில் வரும் ரயில்கள் மாலையில் முதல் நடைமேடையில் வருகிறது. காலையில் இரண்டாம் நடைமேடையில் வரும் ரயில்கள் முதல் நடைமேடையில் வருகிறது. ஆக புதியதான முதல் நடைமேடை சரிவர பயன்படுத்துவது இல்லை என்றே சொல்லலாம். மேலும் இப்போது சில நாட்களாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மின்சார தினசரி ரயில்களை சரியான குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை. மிகவும் தாமதாமாகிறது. மறைமலை நகர் கேட் தொடர்ந்து பல நாட்கள் தொந்தரவு தான். இந்த கோலத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் பத்து ரயில் சேவையை நிறுத்தியுள்ளனர் என்று ரயிலில் தினசரி பயணிக்கும் ரயில் ஊழியர்களே பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சில முக்கிய ரயிலை நிறுத்தி விட்டனர். அதனால் கூட்டம் வழிகிறது. காலை சரியான நேரத்தில் ரயில்கள் வந்து சேராததால் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் கூட்டம் வழிகிறது. முண்டியடித்து ஏறுவதில் சண்டையே நடைபெறுகிறது.


R K Raman
பிப் 01, 2025 09:21

விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை அமைக்கும் பணி என்ன ஆச்சு என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும் ஓர வஞ்சனை செய்வது ஏன்? ஆம்னி பஸ் பிழைக்க அப்போது மாயவரத்தில் ஜெயித்த ஐயர் அகலப் பாதை இயக்கத்தை தாமதித்து பின்னர் தஞ்சாவூர் வியாபாரிகள் போராட்டம் நடத்தி துவங்கினார்கள் என்று கேள்வி...


M Ramachandran
பிப் 02, 2025 17:28

ஊ ஊ இதனால் தலை குடும்பத்திற்கு ஆதாயம் ஒன்று மில்லை அதனால் முட்டுக்கட்டைய்ய போட படும் கங்காணிகள் ஒரு சாராய கம்பெனி முதலாளி பாலு ராஜமாணிக்கம் மற்றும் கன்னி மொழி அம்மையார் ?


Yadunath Balaji
பிப் 01, 2025 09:04

மிகவும் அவசியமான திட்டம். போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை