சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. தேர்தல்நேரம் என்பதால்,அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தேசிய கீதத்தை புறக்கணித்தாக தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் முடித்து கொண்டார். இதனையடுத்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவி உரையில் ; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k83moibf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உண்மைக்கு மாறான தகவல்
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே , சட்டமன்ற உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே , சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் ! என தமிழில் பேசி தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, ''2024ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தயாரித்த உரையில் உண்மைக்க மாறான தகவல்கள் உள்ளதால் நான் இந்த உரையை படிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட போதிலும், உரையை துவங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும்'' . பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து. என்ற திருக்குறளையம் வாசித்தார். வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம், ஜெய்ஹிந்த், நன்றிஎனக்கூறி உரையை முடித்தார்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில், சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன்துவங்குவது வழக்கம். கடந்த ஆண்டு கவர்னர் ரவி உரையாற்றிய போது, அச்சிடப்பட்ட தன் உரையில், சில பகுதிகளை விடுத்தும், சிலவற்றை சேர்த்தும் பேசினார்.சந்தேகம்
இதை எதிர்பார்க்காத முதல்வர், அரசு அச்சிட்டு அளித்த உரையை மட்டும் சபையில் பதிவு செய்ய, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த கவர்னர், சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.இச்சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின் கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் தொடர்கிறது. இதனால், இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.ஆனால், வழக்கம்போல சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கும் என, சபாநாயகர் அப்பாவு இம்மாதம் 1ம் தேதி அறிவித்தார். அதன்படி, நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று துவங்கியது. கவர்னர் உரை மீதான விவாதம் மற்றும் பதிலுரைக்கு பின், மீண்டும் சட்டசபை கூட்டம் வரும் 19ம் தேதிநடக்கும். அன்று 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கலாகும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் சிலநாட்கள் நடக்கும். தேர்தல் நேர பட்ஜெட் என்பதால், அதிலும் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.