உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளில் போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.,வினர் 

வீடுகளில் போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.,வினர் 

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். நேற்று முன்தினம் இரவு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இதனால், கண்டன ஆர்ப்பாட்டங்களை ரத்து செய்வதாக பா.ஜ., அறிவித்தது. அதேநேரம், ஏற்கனவே அறிவித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத கட்சியினர் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் தங்களுடைய வீட்டின்முன், தமிழக அரசை கண்டிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !