உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதானி குறிவைக்கும் பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம்: திடீர் வருகையின் பின்னணி என்ன?

அதானி குறிவைக்கும் பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம்: திடீர் வருகையின் பின்னணி என்ன?

சென்னை: சென்னைக்கு அருகில் பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவது மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக தான் அதானி திடீரென சென்னை வருகை தந்து முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி, இரு நாட்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்திருந்தார். இங்கு முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழகத்தில் பல கோடிக்கு முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்கள் செய்திருந்தது. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்யும் திட்டம் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rx57hcq4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதானியின் திடீர் வருகை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வெளியான தகவல்களின்படி, கவுதம் அதானி மற்றும் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் அவரது சகோதரருமான ராஜேஷ் சந்திலால் அதானி, அவரது மகன் கரண் அதானி (அதானி துறைமுகம், சிஇஓ) உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலை பகுதிக்கு சென்றுள்ளனர். அதே பகுதியில் தான் முதல்வர் ஸ்டாலினின் வீடு இருக்கிறது. ஆனால், அவர்கள் முதல்வரை சந்தித்தனரா எனத் தெரியவில்லை. அன்று முழுவதும் முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர்கள் இரவு விமானத்தில் கிளம்பும்முன் இ.சி.ஆர்.,-ல் இரவு விருந்து முடித்துக்கொண்டு கிளம்பியுள்ளனர். அதானி குழுமம் தமிழகத்தில் தற்போது ராமநாதபுரத்தில் 700 மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிப்பு மற்றும் வட சென்னையில் காட்டுப்பள்ளி துறைமுக மேம்பாட்டிற்கு முதலீடு செய்துள்ளது. அதுதவிர பரந்தூர் விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும், ஏற்கனவே கான்ட்ராக்ட் எடுத்திருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும் அதானி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூலை 11, 2024 23:00

தமிழகத்தின் தொழில் துறை முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தால் சந்தோஷமே!


கரிவரதன்
ஜூலை 11, 2024 19:35

நிலக்கரி ஊழலை செட்டில் பண்ண வந்திருப்பாரோ?


S MURALIDARAN
ஜூலை 11, 2024 18:24

தங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை எதிர்கட்சியாக இருந்தால் ஒரு கொள்கை என்று இரட்டை வேடம் போடும் இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ் நாட்டை நாசம் செய்கின்றன. இந்தியாவின் முன்னேற்றம் கிராமங்களின் வளர்ச்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து விவசாயப் பொருட்களை பெருக்கினால் மட்டுமே உண்மையான முன்னேற்றம் ஏற்றப்படும்.


Rangarajan Cv
ஜூலை 11, 2024 15:50

At this rate Adani will cover all the state govt including opposition ruled states


naranam
ஜூலை 11, 2024 15:07

திமுக அரசும் எதுவும் செய்ய மாட்டாங்க.. செய்கிறவனையும் செய்ய விட மாட்டாங்க.


சுறா
ஜூலை 11, 2024 15:03

2 வருஷமா அங்குள்ள விவசாய மக்கள் இன்னும் தங்களின் வாழ்வு ஆதாரத்திக்காக போராட்டம் செய்கின்றனர். அதை பற்றி பேச ஒரு ஊடகமும் தயார் இல்லை....


kulandai kannan
ஜூலை 11, 2024 14:48

திமுக காட்டியும் கொடுக்கும்


KRISHNAN R
ஜூலை 11, 2024 12:50

அதெப்படி... இவுக.. மற்றும் அரசியல் வியாதிங்க அக்கவுண்ட் எல்லாம். சரியா இருக்கு.. சின்ன காபி டே....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:16

தங்கள் சாராய யாவாரிங்க தவிர பணக்காரனுங்களே இருக்கக் கூடாது ன்னு நினைக்கிற டீம்கா கொத்தடிமைகள் கருப்பு பலூனு உடுறதுக்கு வாய்ப்பே கொடுக்காம ரகசியமா சென்னை வந்துட்டுப்போனது எவ்ளோ பெரிய தப்பு தெர்மா ????


Swaminathan L
ஜூலை 11, 2024 12:15

அதானி, அம்பானி அரசியலுக்கும் வேண்டும். அரசாங்கத்துக்கும் வேண்டும் தானே ஒரு பக்கம் இப்படி, இன்னொரு பக்கம் அதானி, அம்பானிக்கே நாட்டையே சாசனம் என்று அணுக்கர் நால்வரை கோஷம் போடச் சொன்னால் ஆயிற்று


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை