மேலும் செய்திகள்
பத்து ஆண்டுகளுக்கு பின் பீஹாரிகள் வரமாட்டார்கள்
7 minutes ago
சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத்தில், 2021 - 22ல் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் முடிவடையவில்லை. அதேசமயம், 'அடுத்த மாதத்திற்குள் இரு அலகுகளிலும் மின் உற்பத்தி துவங்கப்படும்' என, மத்திய மின் துறையிடம், தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை, 2017 அக்டோபரில் மின் வாரியம் துவங்கியது. இந்த பணியை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., நிறுவனமும், கடலில் நிலக்கரி முனையம் அமைக்கும் பணியை, ஐ.டி.டி., சிமென்டேஷன் என்ற நிறுவனமும் மேற்கொள்கின்றன. மொத்த திட்ட செலவு, 13,076 கோடி ரூபாய். உடன்குடி அனல்மின் நிலையத்தின் இரு அலகுகளிலும், 2021 - 22ல் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டது. மந்தகதியில் பணிகள் நடந்ததால், திட்டமிட்ட காலத்திற்குள் உற்பத்தியை துவக்க முடியவில்லை. நீண்ட இழுபறிக்கு பின், முதல் அலகில் இந்தாண்டு செப்., 11ல் சோதனை மின் உற்பத்தி துவங்கியது. அதில், 72 மணி நேரம் தொடர்ந்து முழு திறனில் உற்பத்தி செய்யப்பட்டதும், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப் படும். இன்னும், இதற்கான பணிகள், உடன்குடி மின் நிலைய முதல் அலகில் நடக்கவில்லை. இரண்டாவது அலகிலும் மின் உற்பத்தி துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உ.பி., மாநிலம் வாரணாசியில், தென் மாநிலங்களின் மின்சார தொழில்நுட்ப கூட்டம், கடந்த, 14, 15ல் நடத்தப்பட்டது. அதில், தமிழகம் உட்பட, தென் மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், உடன்குடி உள்ளிட்ட புதிய மின் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, தாமதத்திற்கு காரணங்களை மத்திய மின் துறை அதிகாரிகள் கேட்டுஉள்ளனர். அதற்கு, 'உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகில், இம்மாதத்திற்குள் வணிக மின் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது; இரண்டாவது அலகில், வரும் டிசம்பருக்குள் மின் உற்பத்தி துவக்கப்படும். 'இந்த பணிகளின் முன்னேற்றத்தை, தமிழக அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; இரு அலகுகளையும் சரியான நேரத்தில் இயக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது' என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
7 minutes ago