உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது. இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் பகுகுகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 24, 2024 20:02

கடிதம் பிரதமருக்கு எழுதுவார் என்று கூறினேன். ஒரு மாறுதலுக்காக முதல்வர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதுகிறார்.


முக்கிய வீடியோ