உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு": மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு": மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன என மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் டி.ஆர்.பி.ராஜா. அமைச்சர் பதவி ஏற்று குறுகிய காலத்தில் சாதனை படைத்துவிட்டார் டி.ஆர்.பி ராஜா. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i1fngjtn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சிக்கு வந்த பின் தற்போது வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இந்த மாநாடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாய்ச்சலாக அமையும். தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடிதளமாக அமையும்.

5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மாநாட்டில் 5068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன. நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு வேலை கிடைக்கும். 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும். உற்பத்தி துறையில் ரூ.3.79 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.

அதிக முதலீடு

உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது. முதலீடுகள் தொடர்ந்து செயல்வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன். உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொழில் துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும். ஒப்பந்தங்களை செயல்படுத்தும் நோக்கில் சிறப்புக்குழு செயல்படும். முதலீடுகள் செய்ய உறுதியளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

rama adhavan
ஜன 09, 2024 07:40

விபரங்களை அரசு வலை தளத்தில் வெளி இடலாமே? என்ன சிரமம்? எல்லோரும் தெரிந்து கொள்வார்களே?


Mani . V
ஜன 09, 2024 06:30

செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு. ஆமா அது என்ன 1454712 கணக்கு? ஏன் 1454700 பேருக்குகோ, 1454750 பேருக்குகோ கிடைக்கக் கூடாதா?


Ramesh Sargam
ஜன 09, 2024 00:21

வெறும் ஒப்பந்தங்களுக்கே இப்படி தற்பெருமை பேசுகிறார். உண்மையாக ஒப்பந்ததாரர்கள் தொழில் செய்ய ஆரம்பித்தால், ஆஹா, கேட்கவே வேண்டாம். ஒப்பந்தம் செய்தவர்கள், பின்னாளில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொடுக்கும் பிரச்சினை தாங்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடுவார்கள். அப்படி இதற்கு முன்பும் ஆகி இருக்கிறது.


Raja
ஜன 08, 2024 22:36

தமிழ் நாட்டின் மொத்த கடனை அதிகமாக விட ஒரே நாளில் முதலீடு பெற்று விட்டோம். இலங்கையும், பாகிஸ்தானும் தமிழ் நாட்டை பார்த்து வயிறு எறிவார்கள், அவர்களின் கடனை விட தமிழகத்தின் கடன் சுமை அதிகம். எவனோ தமிழ் நாட்டின் மொத்த கடனை முதலீடு என்று எழுதி கொடுத்துவிட்டான், எவன் செய்த வேலையோ?


sankaranarayanan
ஜன 08, 2024 22:36

44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன் என்றார் முதல்வர் நல்லது செங்கல் நன்றாக விற்பனை ஆகியுள்ளது ஆனால் அந்த செங்கல்லுடன் நிற்காமல் அங்கே தொழிற்சாலை கட்டிடங்கள் சீக்கிரமே எழும்பி ஆலைகள் வெகு விரைவில் தொடங்கி உற்பத்தியை பெருக்கினால்தான் எல்லாமே உண்மையாகும் இது எதுவரை நடைமுறையில் சாத்தியம் என்பது போகபோகத்தான் தெரியும்


Rajinikanth
ஜன 08, 2024 22:31

இந்த செய்தியை அப்படியே மோடி அவர்கள் நிகழ்த்தினார் என்று போட்டால் ஆஹா ஓஹோ என்று இந்த கூட்டம் மெய் சிலிர்க்கும்


g.s,rajan
ஜன 08, 2024 22:30

உஸ்.... அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே......


Raja
ஜன 08, 2024 22:28

சிரிப்பு :) சிரிப்பு :)


R. Vidya Sagar
ஜன 08, 2024 22:19

எல்லா தொழிற்ச்சாலைகளும் கலைஞர் கருணாநிதி என்று பெயரிடப்படும். எல்லா தொழில்சாலைகளிலும் கலைஞரின் சிலை நிறுவப்படும்.


Bye Pass
ஜன 08, 2024 22:40

சில செராமிக்ஸ் மற்றும் சனிடரிவெர் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வருவார்களா ?


sankar
ஜன 08, 2024 21:33

அடிச்சு விடுவோம் - கேட்க நாதியில்லை


மேலும் செய்திகள்