உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்ததற்கு போட்டியாக, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை, தீபாவளி நாளில் தமிழக அரசு வெளியிட உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iq97kyny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு, 10,000 கோடி ரூபாய் தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் கட்சியான தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வரும் பொங்கலுக்கு கார்டுதாரர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே டில்லியில் சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, அறிவித்தார். இந்த அறிவிப்பை பற்றி தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர். அதனுடன் போட்டி போடும் வகையில், பொங்கலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே, அதாவது அக்டோபரில் தீபாவளி சமயத்தில், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட உள்ளது. இதனால் அரசுக்கு, 10,000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான நிதி திரட்டும் பணிகளில் கவனம் செலுத்தி, அவசியம் இல்லாத செலவுகளை குறைத்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு வரலாறு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. அப்போது, சர்க்கரை பொங்கல் தயாரிக்க பயன்படும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்டை, ஏலக்காய் ஆகியவை, குறிப்பிட்ட எடையில் வழங்கப்பட்டன. பின், 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சியில், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த, 2016 - 21 அ.தி.மு.க., ஆட்சியில், மளிகை தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. குறிப்பாக, கடந்த, 2021 பொங்கலுக்கு, அந்தாண்டில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கார்டுதாரர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2022ல், பொங்கலுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கமும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கம் இல்லாமல் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டன.

வாழ்த்து உண்டா?

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என முதல்வரை ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை தமிழக பாஜ குற்றச்சாட்டாக சொல்லி வருகிறது. தற்போது தீபாவளி வாழ்த்தும் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

பா. சக்தி வேல்
ஆக 22, 2025 18:55

எதுவானாலும் மக்களுக்கு நன்மை பயக்குமாயின் நல்லது.


Peterraj Jayakumar
ஆக 22, 2025 16:40

Avar Tamilar pongalukku matrum Tamil vilakkalukku valthusolvar Anaiithu madamum sammatham eneve christmas Tamzan vvalthu kooruvar vada nattu kalaam namakku vendam murugar koil up bihar himachal kidayathu valipafum illai


Kpkumar Malar
ஆக 22, 2025 07:27

சந்தர்ப்ப வாத அரசியல் சூதூ சகுனி ஆடும் சூதாட்டம் இருட்டில் ஆடும் சூதாட்டம்


JEE
ஆக 22, 2025 07:15

திருட்டு தி மு க அரசு நம்ம வரிப்பணத்தில், இலவசத்தை வாரி இறைத்து, ஒரே ஓட்டு என்ற நோக்கம் கொண்டு, மாநில பொருளாதாரத்தை சர்வ நாசம் செய்கிறது. இதை தடுக்க யாரும் ஒரு கேஸ் போட வழியே இல்லையா, ஊழல் மிகுந்த அறிவு மிக்க நீதி மன்றமும் ஒரு சுய மோட்டோ கேஸ் பதிவு செய்யலாம் 10 லக்ஷம் கடன் 20 லக்ஷம் ஆகி எல்லா மாநில அரசு வரிகளும் ஏறு முகம்


Peterraj Jayakumar
ஆக 22, 2025 16:47

பிஜேபி ஒட்டு திருட்டு அரசு 15000 கொடுப்பேன் எனஏமாற்றியது வெல்ல நிவாரணம் கல்வி தொகை மறுத்து வருவது எலேச்டின் வருவத்ஸல கிஸ்தி வரிக்குறைப்பு ஓட்டுக்காக என்பது நண்பருக்கு puryatha


Anantharaman Srinivasan
ஆக 21, 2025 21:03

தீபாவளிக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 என்பது உண்மையா.? போகபோகத்தான் தெரியும். தீடீரென்று 3000 என்பார்கள்


venugopal s
ஆக 21, 2025 19:27

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பது யாருடைய பணம்?


vivek
ஆக 22, 2025 08:32

வீணா போனவனே பிரதமர் செய்வது உதவி....திராவிடம் செய்வது லஞ்சம்..ஓட்டு லஞ்சம்


Training Coordinator
ஆக 29, 2025 12:19

அது டீ வித்து சம்பாதித்தது.


Gandhi Chinnasamy
ஆக 21, 2025 19:02

வாழ்த்துக்கள் சொல்லுவது அவரவர் விருப்பம் இதையே பெரியதாக்கி அரசியல் புரிதல் இல்லாமல் இந்த சங்கி கூட்டம் ஆச்சே இப்படி தான் இருக்கும்


JEE
ஆக 22, 2025 07:19

எல்லா பண்டிகையும் தவிர்த்தல் பரவாயில்லை, ஹிந்து வோட்டை பெற்று, ஹிந்து கோயில்களை கொள்ளை அடித்து மற்ற மதத்தினரை குஷிப்படுத்துவது அநியாயத்துக்கு அநியாயம்


S.Muthiah S.Muthiah
ஆக 23, 2025 12:20

ரம்ஜான் .கிறிஸ்மஸ் பண்டிகைமட்டும்தான் தெரியுதா ?நடுநிலையா இருக்கனும் அதென்ன சங்கிக்கூட்டம் மற்ற தெல்லாம் சொங்கிக் கூட்டமா?


sankaranarayanan
ஆக 21, 2025 18:45

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு வரவேற்கிறோம் திடீரென்று எப்படி அய்யா இந்த திராவிட மாடல் அரசுக்கு இந்த ஞானோதயம் உண்டாயிற்று.இவர்கள்தான் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்களே பெரியார் கொள்கையைப்பின்பற்றுபவர்கள் திடிரென்று தீபாவளி வருமுன் மக்களை கவர் பெரியார் கொள்கையிலிருந்து விலக்கமா.எப்படி உங்களை இனி அரசியலில் மக்கள் நம்புவது?


Anand
ஆக 21, 2025 18:36

ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் தலா ஐந்தாயிரம் என அறிவித்தால் தேர்தலில் வாக்குகளை அள்ளலாம்.. வெற்றிபெற்ற பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் என உருட்டி காலத்தை கழிக்கலாம்..


D.Ambujavalli
ஆக 21, 2025 16:33

ஆஹா எலி ……ஆக ஓட ஆரம்பித்துவிட்டதே ‘வெல்லத்தைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே நெய்வேத்தியம்’ என்பார்கள் எங்களிடம் எட்டுபங்கு வரி வசூலித்து, இப்படி வாரியிறைத்து விட்டு, அடுத்து வருபவருக்கு கஜானாவைக் கவிழ்த்து வைத்துவிட்டுப் போவார்கள் அங்கங்கே அமைச்சர்களிடம் பிடிபடும் கோடிகளை சேர்த்தாலே லட்சம் கோடி தேறும் அதிலிருந்து இந்த 10000 கோடியைக் கிள்ளி கொடுத்து ஓட்டுக்களை வாங்கட்டுமே எங்கள் வரிப்பணத்தில் பள்ளிகளும், மருத்துவம், சாலை வசதி என்று எதுவும் செய்யாமல், காசை வீசியெறிந்து வாக்குகளை வாங்கப்பார்க்கிறீர்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை