உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

முருங்கை இலை ஏற்றுமதி தமிழக அரசு அழைப்பு

சென்னை:'முருங்கை இலை சாகுபடி வாயிலாக, நிலையான வருமானம் பெற விருப்பம் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்' என, தமிழக அரசின் டி.என்.ஏபெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அழகுசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்திற்கு, பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஆண்டுக்கு, 200 டன் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வாய்ப்பு, டி.என்.ஏபெக்ஸ், தனியார் நிறுவனம், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுத்தப்படும். முருங்கை இலை சாகுபடி வாயிலாக சந்தை வாய்ப்பு பெற்று, நிலையான வருமானம் பெற, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முருங்கைசாகுபடி 20,741 எக்டேர் உற்பத்தி 8.41 லட்சம் டன்உலகளாவிய சந்தை வாய்ப்பு: ரூ. 86,000 கோடி முருங்கை இலை பொடிக்கு மட்டும் : ரூ. 51,000 கோடி80%உலகளவில் முருங்கைக்கான சந்தை தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் பங்கு தமிழகம்*இந்தியாவில் முதலிடம்*மதுரையில் முருங்கை சிறப்பு ஏற்றுமதி மையம்*35 ஏற்றுமதி நிறுவனங்கள் வாயிலாக 800 ஏக்கரில் தனித்தன்மையான முருங்கை இலை சாகுபடி *ஆண்டுக்கு, 720 டன் முருங்கை இலை பொடி தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள்ஏற்றுமதியாகும் முருங்கை பொருட்கள்முருங்கை இலை பொடிஎண்ணெய் விதை பொருட்கள் முருங்கை தேனீர் பொருட்கள் https://www.tnapex.tn.gov.in/ords/r/wstnapex/tnapex173136/moringa-export-zone?session=4601688178950


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V.vijayasarathi
ஆக 25, 2025 15:45

மோரிங்க


thangamall Veeramani
ஏப் 09, 2025 21:24

எத்தனை டன் வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்வதற்கு முருங்கை இலையை நான் தயார் நீங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு செல் நம்பர் கொடுக்கவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை