உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு நாடகம்: அன்புமணி

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு நாடகம்: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறுவது பொய், தமிழக அரசின் நாடகம்'' என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியும் என முதல்வர் கூறுவது சரியல்ல. மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உள் ஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கூறுவது பொய். இது தமிழக அரசு நடத்தும் நாடகம். Caste Census மத்திய அரசு எடுப்பது, Caste Survey மாநில அரசு எடுப்பது. அந்த அதிகாரத்தை வைத்து தான் பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை செய்யவில்லை. அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர். கர்நாடகா அரசு எடுத்து முடித்துள்ளது. அப்படியிருக்கையில், தமிழக அரசுக்கு எது தடையாக உள்ளது?

விவாதிக்க தயார்

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். 2008 புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டப்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. பஞ்சாயத்து தலைவருக்கு கூட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. கணக்கெடுப்பு நடத்த மனசில்லை என சொல்லிவிட்டு போங்கள். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Er. G.Selvaraju
ஜூன் 26, 2024 14:18

உங்களுக்கென்னப்பா மக்கள் தொகையில் பத்து விழுக்காடு நீங்கள் இருந்தால் கூட 18% உத்திரவாதம். தமிழகத்தில் 20% மக்கள் கொண்ட வன்னியர் சமூகம் தனக்கு ஏதாவது கிடைக்குமா? என்று போராடுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்பவர்கள் 18% வேண்டாம் என சொல்லுங்களேன்.


Barakat Ali
ஜூன் 26, 2024 14:17

திமுக தொடர்ந்து சுமார் பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தது சுருட்டத்தான் .... கணக்கெடுப்பு நடத்த அல்ல ....


vadivelu
ஜூன் 26, 2024 14:00

மாநில அரசு சாதி வாரி எடுத்தால் இந்த மாநிலம் தமிழர்களின் மாநிலம் இல்லை என்பது தெரிந்து விடும்.மாநிலம் முழுதும் தெலுங்கு, மலையாளம் , வங்க மொழி, உருது , இந்தி பேசும் மக்களே தமிழ் மக்களை விட அதிகம்.


GMM
ஜூன் 26, 2024 13:33

அன்புமணிக்கு சாதி பற்று இருந்தால், வன்னிய சாதியினர் அதிகம் என்று கூறி வருவதால், வன்னியர் ஒன்றுகூடி, பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு உருவாக்கி கொள்ள முடியும். தற்போது அனைத்தும் தனியார் மயம். ஜாதி எண்ணிக்கை குறைந்த சமுகத்திற்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு தேவை. இவர்கள் தன் தேவையை தானே பூர்த்தி செய்ய முடியாது. உதாரணம் முதல்வர் சாதி. சாதி சர்வே எடுக்க முடியும் என்றால் சாதி பொருளாதாரம், சாதி நில பதிவேடு, சாதி குடும்ப கட்டுப்பாடு விவரம் எடுக்க முடியும். ஆதிக்க ஆங்கிலேயர் மதம் பரப்ப கொண்டு வந்து வெற்றி கண்டது சாதி இட ஒதுக்கீடு. கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு அதிகம் ஒதுக்கியும் வன்னிய கிருத்துவர்கள், கிருத்துவ நடார்கள், தலித் கிருத்துவர்கள் ..... உருவானது ஏன்? எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 12:52

Caste Census அல்லது Caste Survey என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் ...மோடி ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தலையாம் என்று விடியல் ...பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் நடத்தியது போல விடியல் தமிழ் நாட்டில் சமூக நீதி மத சார்பின்மை ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது தானே? ..அப்படி விடியல் நடத்த யார் தடுத்தார்களாம்?? ....நிதிஷ் குமார் எப்படி கணக்கெடுப்பு நடத்தி அதன் படி மத சார்பின்மையாக இட ஒதுக்கீடு எப்படி கொண்டு வந்தார் ??.....


Ambedkumar
ஜூன் 26, 2024 11:53

சாதியை தூக்கிப் பிடிப்பதை விட்டு விட்டு, அனைவருக்கும் மிகத் தரமான கல்வியைப் பெறப் போராடுங்கள்.


Tamil Inban
ஜூன் 26, 2024 11:42

சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து என்ன பண்ணபோறீங்க எல்லோரையும் நல்லா படிக்க சொல்லு. எங்கு பார்த்தாலும் சமவாய்ப்புகளாகி விட்டது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 26, 2024 12:23

படித்தாலும் வாய்ப்புகளை அள்ளி கொடுத்துடுவாங்களா மதவாத முன்னேற்ற கழகம் ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை