உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு இணையான போனஸ்; தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசுக்கு இணையான போனஸ்; தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; 'மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக ரூ. 7 ஆயிரம் வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கும் பாரபட்சமின்றி முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியுள்ளதாவது: 2006 ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி அந்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7 ஆயிரம் போனசாக பெற்று வருகின்றனர்.அதனைப்பின்பற்றி தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மட்டுமே போனசாக வழங்குவது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க அரசு ஆணை வெளியிட வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கருணைத் தொகை, தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சம் இன்றி ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

balasanthanam
ஜன 03, 2025 21:27

போனஸ் என்பதே உற்பத்தி துறை சார்ந்த விஷயம் அரசாங்க ஊழியர்களுக்கு எதற்கு போனஸ் எவ்வளவு லாபம் ஈட்டினார்கள்


அப்பாவி
ஜன 03, 2025 18:00

நமக்கு நாமே திட்டம் தெரியாதா? நீங்களே ஆட்டையப் போட்டுக்கலாம். மாட்டிக்கக் கூடாது.இதுதான் விடியல் மாடல்.


N Sasikumar Yadhav
ஜன 03, 2025 12:02

மத்தியரசு ஊழியர்கள் மாதிரி லஞ்சம் வாங்ககமல் பணியாற்ற வேண்டும் .


vijay
ஜன 03, 2025 09:04

மொதல்ல மாச சம்பளத்தை கரெக்ட்டா கொடுக்க சொல்லுங்க.


Alagusundram Kulasekaran
ஜன 03, 2025 09:00

அந்த பொருட்கள் கண்காட்சி பணம் இருந்தால் பணம் கொடுத்து வாங்கி செல்ல தமிழக முதல்வரின் நாங்கள் சொல்லுவதை யுகம் சொல்லாத அதாவது பொங்கல் பரிசு தொகுக்கப்பட்ட பணம் இல்லை காஞ்சு போன கரும்பு வாங்க உங்களுக்கு வக்கு இல்லை வெல்லம் வாங்க வக்கு இல்லை நாங்கள் ஒசி சக்கரை எங்க அப்பா வீட்டு சொத்தில் தருகிறோம் என சொல்லாமல் சொல்லும் திராவிட மாடல் அரசு து இளிச்சவாயன்களா ஒட்டு போடுங்க 2026


Barakat Ali
ஜன 03, 2025 08:54

வாங்குற சம்பளமும், கிம்பளமும் பத்தலை.. ஸ்டெப்னி குடும்பத்துக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கு.. டெயிலி சரக்கு, பார்ட்டி ன்னு என்ஜாய் பண்ண முடியலை... போட்டுக்குடுங்க சர்வாதிகாரி "சார்" .....


அப்பாவி
ஜன 03, 2025 08:40

அவிங்களுக்கு இந்தி தெரியும். உங்களுக்கு என்ன தெரியும்? முடிஞ்ச வரைக்கும் ஆட்டையப் போட்டுக்கோங்க. யாரும் கண்டுக்க மாட்டாங்க.


vns
ஜன 03, 2025 08:11

அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் மற்றும் போனஸ் பெறுகிறார்கள்.. அப்புறம் உயிர் உள்ளவரையில் ஓய்வூதியம் வேறு. எந்த அரசாலும் இதுபோன்ற வெட்டிச் செலவுகளை சமாளிக்க முடியாது. ஓய்வூதியம் ஊழலற்று வேலை செய்பவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் - 10 வருடம் பேழை செய்தவருக்கு 10 வருடம் தான் ஓய்வூதயம் கொடுக்கப்படவேண்டும்


T.sthivinayagam
ஜன 03, 2025 07:54

மத்தியில் ஆளும் பாஜக அரசு உபி மாநிலத்திற்கு அளித்த நிதிக்கு இணையான நிதியை தமிழகத்துக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக மக்கள் கேட்கின்றனர்


ghee
ஜன 03, 2025 08:16

குடுத்த நிதிக்கு கணக்கு சொல்ல வக்கிலயா என்று உன்னை பார்த்து நான் கேட்கிறேன்


Kasimani Baskaran
ஜன 03, 2025 12:19

ஊழல் செய்தால் புல்டோசர் வரும் - பரவாயில்லையா?


Vijay
ஜன 03, 2025 07:32

சுயநல அரசு ஊழியர்களால் நாடு நாசமாக போகிறது


சமீபத்திய செய்தி