உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளது. விளையாட்டு பல்கலை குழுவில் நிதித்துறை செயலரை நியமிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை சட்ட திருத்த மசோதா - 2025, கடந்த ஏப்ரல் மாதம் 29ல் நிறைவேற்றப்பட்டது. பின் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, கோப்புகளை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கவர்னர் முடிவெடுத்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'கவர்னரின் இந்த முடிவு அரசியல் சாசனத்தின் பிரிவு 200ஐ மீறும் வகையில் உள்ளது. எனவே, கவர்னரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
அக் 16, 2025 06:39

தமிழக அரசா, தமிழக நிர்வாகமா. தமிழக நிர்வாகம் கவர்னர், உயர் நீதிமன்ற நீதிபதி , தலைமை செயலர் , மாநில தேர்தல் ஆணையர், தணிக்கை தலைவர் மீது புகார், வழக்கு, பரிகாசம் சட்ட விரோதம். மனு அளித்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய முடியும்.


Sun
அக் 16, 2025 06:32

வலிய சென்று சிக்குகிறது தமிழக அரசு. ஏற்கெனவே ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட முடியுமா? என்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது தமிழக அரசின் இந்த மனு மீது உச்ச நீதி மன்றம் உத்தரவிட வாய்ப்புகள் மிகவும் குறைவே.


ramani
அக் 16, 2025 05:31

ஆளுநர் சட்டப்படிதான் நடக்கிறார். ஊராட்சி ஒன்றிய அரசு தான் எதிர்மறையாக நடக்கிறது. கண்டிக்க படவேண்டியது ஊராட்சி ஒன்றிய அரசை.


Muthuraman
அக் 16, 2025 04:10

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பழைய தீர்ப்பில் மிக மோசமாக அடி வாங்கி உள்ளது . ஆகவே இன்னொரு அடி வாங்க முடியாது .அதனால் இந்த முறை எந்த தீர்ப்பையும் வழங்காது. விடியலுக்கு ஆம்லெட் தான் .


Kasimani Baskaran
அக் 16, 2025 03:47

விரைவில் தமிழக அரசியலமைப்புச்சட்டம் என்று ஒன்றைக்கூட நிறைவேற்றி நீதிமன்றம் மூலம் அதை சட்டம் என்று கூட ஆக்க வாய்ப்பு இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை