உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை நீர் தேங்காமல் தடுப்பதில் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ்

மழை நீர் தேங்காமல் தடுப்பதில் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன'' , என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணியில் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அடுத்து வரும் மழைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை வேண்டும்! சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை முக்கிய சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன.திருப்புகழ் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தவாறு மழை நீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தால் சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை நீர் தேங்காமல் தடுத்திருக்க முடியும். சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Narayanan Sa
அக் 16, 2024 21:38

சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள ஒரு சில மாவட்டங்களை பற்றி மட்டுமே இவர்கள் ஆதங்க படுகிறார்கள். அப்படி என்றால் சென்னையில் மட்டும் தான் மக்கள் இருக்கிறார்களா தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் மக்கள் வாசிக்கவில்லையா. அவர்கள் நம் சகோதரர் சகோதரிகள் இல்லையா. ஆனால் நம் மாடல் அரசு சென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு கொடுப்பதில்லை என்பது உண்மை


கிஜன்
அக் 16, 2024 20:53

மருத்துவர் அய்யா .... கொளத்துக்குள்ள வீடு கட்டினா ... தண்ணி தேங்கத்தாங்கய்யா செய்யும் ....


T.sthivinayagam
அக் 16, 2024 19:35

மழை வருணபகவானின் செயல்.நீர்நிலைகள் நிறைய நிலத்தடி நீர் உயர நீர்தேங்குவது தேவைதான்.நீங்கள் பேசுவது தமிழ் தெரியாதவர்கள் தமிழை திட்டுவது போல் உள்ளது


raja
அக் 16, 2024 19:46

கரட்டா சொன்ன கொத்தடிமையே தமிழ் தெரியாத ஒன்கொள் கொள்ளை கூட்ட தலைவன் கோவால் புற தச்சினா மூர்த்தியும் அவன் வாரிசுகளையும் தமிழர்கள் இப்போ திட்டுகிறார்கள்...


rama adhavan
அக் 16, 2024 20:05

அதற்கு கண்ணை விற்று ஒவியம் வாங்க முடியாது. மனித, விலங்குகளின் உயிர், உடைமைகளை வருடா வருடம் வாட்டி, பயணம் வைத்து நீர் மட்டத்தை உயர்த்தி யாருக்கு பயன்?


raja
அக் 16, 2024 19:08

பார்ரா கோவால் புற கொத்தடிமைக்கு வர்ற கோவத்தை...


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 17:23

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன், மோடி அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழே மார்க் போட்ட ஆசாமி தான் இவன். அப்புறம் அவருடனே கூட்டணி வெச்சுக்கிட்டு மண்ணைக் கவ்வின பரம்பரை.


raja
அக் 16, 2024 19:43

இப்போ நடக்குற உண்மையை பேசு... போயிட்டார் 2011–க்கு தமிழன் ஒட்டு போட்டு உக்காத்தி வச்சி இருக்கிறவண்ட கேக்குற உரிமை இருக்கு ...


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 17:21

ஆமாம் த.ரா. த .ரத்னம், அதிலென்ன சந்தேகம்?? துட்டு குடுக்கலேன்னா ராமதாஸ் வீட்டை விட்டு வெளிய கூட வரமாட்டார்.


raja
அக் 16, 2024 19:09

ருவா 200 க்கெல்லாம் கொத்தடிமைகள் இம்புட்டு பொங்க கூடாது...


yaro
அக் 16, 2024 17:08

மரவெட்டியரே சற்று மூடுங்கள்


ஆரூர் ரங்
அக் 16, 2024 16:39

ஏரி இருந்த நுங்கம்பாக்கம் லேக் பகுதியை தூர்த்து அதில் வள்ளுவர் கோட்டம் கட்டியது யார்? ( வெள்ளம் வராமல் என்ன செய்யும்?). குறளோவியம் எழுதி காசு பார்த்தவர்தான். மறந்த குறள்.நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 16, 2024 16:13

எதில்தான் இந்த அரசு வெற்றியடைந்துள்ளது ராமதாஸ் அவர்களே ????


அரசு
அக் 16, 2024 15:43

இந்த மாதிரி தினமும் ஒரு பொய் அறிக்கை விடும் பணத்தாசை, பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளை, அரசியலை விட்டே துரத்த வேண்டும்.


raja
அக் 16, 2024 19:10

ஸ்டிக்கர் ஒட்டும் கோவால் புற கொள்ளை கூட்டத்தை தானே சொல்ற...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை