உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!

அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!

சென்னை: ''குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்கு செல்லும் போது எல்லாம், பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அந்தவகையில், இன்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகி, மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசுகையில், ''குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள்'' என தெரிவித்தார்.இந்த வீடியோவை பகிர்ந்து ஒருவர், ''குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழகத்தில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்'' என பதிவிட்டு இருந்தார்.இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ''குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 23:28

முதல்வர் அவரது குடும்பத்தினர் நடத்தும் வணிகங்கள் ,கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தமிழ் பெயரை முன்னிறுத்துவரா , இல்லை அதுவும் கண்துடைப்பு ஆகுமா


உண்மை கசக்கும்
ஏப் 30, 2025 21:44

டாஸ்மாக், சிக்னல், கார், பைக், பெட்ரோல், டீசல், செராக்ஸ், சன் டிவி, சன்ஷைன் பள்ளி, ரெட் ஜயன்ட் மூவிஸ்.. நிறைய உண்டு. மாற்ற முடியுமா?


sankaranarayanan
ஏப் 30, 2025 20:36

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்த முதல்வர் முதலில் தனது பெயரை தூய தமிழில் மாற்றிவிட்டு அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்தால் நல்லது.


s_raju
ஏப் 30, 2025 20:30

தக்ஷிணாமூர்த்தி கருணாநிதியாக மாறும்போது ஸ்டாலின் தன பெயரையும் மாற்றலாம் . அதே போல் உதயநிதியும் தமிழ் பெயரை வைத்துக்கொள்ள எது தடுக்கிறது.


MUTHU
ஏப் 30, 2025 19:34

வெப்சைட் பராமரிப்புக்கென்று எவ்வளவு பணம் ஆட்டை ஆகுமோ.


Veluvenkatesh
ஏப் 30, 2025 18:53

ஆக, இந்த புதிய தமிழ் பெயர் அகராதி வெளி வந்தவுடன் கோபாலபுர குடும்ப உறுப்பினர் அனைவரும் தங்களது கலப்பு மொழி பெயர்களை தூய தமிழ் பெயர்களாக மாற்றி கொள்வார்கள்??? அப்புறம் யாரு நீங்கன்னு? யாரும் கேட்கக்கூடாது சார்?


Balasubramanyan
ஏப் 30, 2025 16:55

When he will change his name and his son name.to learn good Tamil pl read Thevaram,Thiuvasagamand Divya Prabandham. So he accepts that Tamilians do not know good Tamil words and how to write and read and speak without any mistakes.


என்றும் இந்தியன்
ஏப் 30, 2025 16:10

தமிழுக்கு முக்கியத்துவம் மக்களுக்கு ஏதோ தனது பாக்கெட்டிலிருந்து கொடுப்பது போல போலி விளம்


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 16:09

என்னோட பெயரையும் உங்களோட பெயரையும் வேண்டுமானால் தமிழ்படுத்தலாம் , அனால் உங்களின் பங்காளிகள் உருது வில் வைக்கும் பெயருக்கு தமிழ் மாற்று என்று ஒருவார்த்தை சொல்லி பாருங்க பாப்போம் ,


என்றும் இந்தியன்
ஏப் 30, 2025 16:05

அதில் முதல் தமிழ்ப்பெயராக இந்த பெயர் தான் இருக்கப்போகின்றது "சுடலை மாயாண்டி ஜோசப் கான் ........ அதன் பிறகு சேகர் பாபர் தாமஸ்"


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை