உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு சொல்லும் பொய் நிரூபணம் ஆகி இருக்கிறது

தமிழக அரசு சொல்லும் பொய் நிரூபணம் ஆகி இருக்கிறது

சென்னை: 'தன் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தி.மு.க., அரசு பல பிழைகளுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது:உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க, பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல நாடகமாடிவிட்டு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பரிந்துரைகளை அறிமுகப்படுத்தி வரும் தி.மு.க., அரசுக்கு நன்றி. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து, 2018லேயே அறிவிக்கப்பட்டு, 2019க்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின் 2020 ஜூலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதுதொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020 செப்.,ரில் தான். தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கையை உருவாக்கினோம் என, அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

NAGARAJAN
ஜன 15, 2024 07:38

இந்த அண்ணாமலைக்கு ஓயாமல் மாநில அரசு பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். . மத்திய பாஜக அரசு பற்றி குறை சொல்ல ஓராயிரம் இருக்க. . அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது போல ஏன் இந்த நடிப்பு. .


அப்புசாமி
ஜன 15, 2024 07:31

பாஞ்சிலட்சமும் பொய்.. ரெண்டுகோடி வேலையும் பொய். நிரூபணமாய் 10 வருஷமாச்சு.


குமரி குருவி
ஜன 15, 2024 06:46

அட நீங்க வேறு தேர்தலுக்கு முன் வாக்குறுதி என தி.மு.க. தந்த பொய்கள் மலை அளவில் நிற்கும்போது இன்னும் பொய்களா.. தாங்காது தமிழ் நாடு..


Kasimani Baskaran
ஜன 15, 2024 06:10

பயமில்லாமல் பொய் சொல்லும் தீம்கா அரசை நீதிமன்றத்துக்கு இழுத்து அங்கு மன்னிப்புக்கேட்க வைக்க வேண்டும். அப்படியே அடிமை ஊடகங்களையும் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்