உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் புத்தகங்களை நிறுத்தி தமிழக அரசு அடாவடி: வெளிமாநில தமிழ் பள்ளிகள் மூடப்படும் அபாயம்

தமிழ் புத்தகங்களை நிறுத்தி தமிழக அரசு அடாவடி: வெளிமாநில தமிழ் பள்ளிகள் மூடப்படும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:வெளி மாநிலங்களில் உள்ள, தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழி கற்க, தமிழக அரசால் ஆண்டுதோறும் அனுப்பப்படும் பாடப்புத்தகங்கள் திடீரென நிறுத்தப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர். வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள், தமிழ் மொழி கற்க, அங்கு செயல்படும் தமிழ் அமைப்புகளின் வாயிலாக, தமிழ் வழிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கப்படுகிறது. அவற்றுக்கு, தமிழக அரசு சார்பில், தமிழ் பாடப்புத்தகங்கள் இலவசமாக அனுப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் புத்தகம் வழங்கப்படவில்லை. புத்தகம் அனுப்பும்படி, வெளி மாநிலங்களில் உள்ள, தமிழ் அமைப்புகள், தமிழக அரசுக்கு, கடிதங்கள் அனுப்பி உள்ளன. அவற்றுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழக உதவி இயக்குநர் சாமுண்டீஸ்வரி கடிதம் எழுதி உள்ளார். அதில், 'வெளிநாடு, வெளிமாநில தமிழ் பள்ளிகள், தமிழ் அமைப்புகளுக்கு, தமிழ் பாடப்புத்தகங்களின் 10 பிரதிகள் மட்டும் இலவசமாக அனுப்ப முடியும். உங்களின் கோரிக்கை குறித்து, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது; ஒவ்வொரு வெளி மாநில தமிழ் அமைப்புக்கும், ஒவ்வொரு ஆண்டும், 10 முதல் 50 லட்சம் ரூபாய் வரை புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன. காகித விலையேற்றம், அச்சுக்கூலி உயர்வு உள்ளிட்டவற்றால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை குறைக்க, ஏற்கனவே பாடநுால்களின் விலை கூட்டப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதனால், வெளி மாநில, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு, பாடப்புத்தகங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது ஒவ்வொரு அமைப்புக்கும், வகுப்பு வாரியாக தலா 10 பிரதிகள் அனுப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, வெளிமாநில தமிழ் அமைப்பினர் கூறியதாவது: வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல. பலர், கூலி வேலைக்கு சென்று, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். ஆனாலும், தாய்மொழியான தமிழை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியாக, தமிழ் பள்ளிகளை நடத்துகிறோம். மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகங்களை, பல ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கியது. தற்போது, 10 பிரதிகளுக்கு மேல் தேவைப்பட்டால், அதற்குரிய நிதியை செலுத்த வேண்டும். கூரியர் செலவை அரசு ஏற்கும் என தெரிவித்துள்ளது. இதனால், தமிழ் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக அரசின் முடிவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N Sasikumar Yadhav
ஆக 12, 2025 10:10

இந்த மானங்கெட்ட திராவிட கும்பலுங்க தான் தமிழை வளர்க்கிறார்களாம். இருக்கிற தமிழை அழிக்கிற கும்பலுங்கதான்


பாமரன்
ஆக 12, 2025 08:19

அங்க என்ன இலவசமாவா சொல்லி தர்றானுவ...


Padmasridharan
ஆக 12, 2025 07:33

பள்ளிகளை ஏன் மூடவேண்டும். பழைய மாணவர்களிடத்தில் புத்தகங்களை திரும்ப பெற்று புதிய மாணவர்களுக்கு கொடுக்க பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்யலாமே.


சுரேஷ் பாபு
ஆக 12, 2025 07:31

இதுதான் தமிழை வளர்க்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல்!


vivek
ஆக 12, 2025 07:20

முட்டு கொடுக்கும் சொம்புகள் எவனும் இந்த பக்கம் தலை வைக்க மாட்டார்கள்


சாமானியன்
ஆக 12, 2025 06:49

இங்கே இலவசம் தேவையில்லை. அடக்கவிலையைத் தரவைக்கலாம். நல்லமனம் கொண்ட பெரியவர்கள் பணம் கொடுத்து உதவலாம். கூரியர் தொகையை ஒரு டிரஸ்ட் ஏற்கலாம். ஏன் அந்த கூரியர் நிறுவனமே கூட இலவசமாக அனுப்பலாம்.


visu
ஆக 12, 2025 08:18

நீங்க எவ்வளவு நன்கொடை அளிக்க போறீங்க


D Natarajan
ஆக 12, 2025 06:23

இது திராவிடர்கள் ஆட்சி. தமிழக மக்களால் அல்ல. ட்ராவிடர்கள் ஓட்டுக்காக தமிழ் எங்கள் உயிர் என்பார்கள். அனால் நடைமுறையில் தமிழுக்கு , ஹிந்து தமிழர்களுக்கு எதிரானவர்கள்


சசிக்குமார் திருப்பூர்
ஆக 12, 2025 05:00

10லட்சம் நிதி கூட இல்லாமல் மொத்தமாக தமிழகத்தை மொட்டை அடித்து விட்டீர்களா. இதில் நெ1 பெருமை பீத்தல் வேறு


Raj
ஆக 12, 2025 04:54

தமிழ் எங்கள் மூச்சு என்று கூறும் திராவிட கட்சியின் ஆட்சி அல்லவா அப்படி தான் இருக்கும்.


Mani . V
ஆக 12, 2025 04:00

இதில் இந்த அயோக்கிய சிகாமணிகள் பீகார் தொழிலார்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறு என்று நாடகம் போடுகிறான்கள். பிளடி இடியட்ஸ்.