உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் சாதனை: இ.பி.எஸ்., பேட்டி

தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் சாதனை: இ.பி.எஸ்., பேட்டி

சென்னை: '' தி.மு.க., ஆட்சியில் கடன் வாங்குவதில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக வெளியிட்ட 565 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான அறிவிப்புகளை கூட நிறைவேற்ற வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., ஆட்சியில் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலினும், உதயநிதியும் கூறினர். ஆனால், பெற்றோர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி இரட்டை வேடம் போடுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xilgu6aq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் கையை விரித்துவிட்டார். நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எண்ணெய், அரிசி பருப்பு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து எந்த முதல்வர் எதுவும் கூறவில்லை. மிகவும் மோசமான தரமற்ற பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஓட்டை உடைசல் பஸ்கள் அனைத்துக்கும் ஸ்டாலின் பஸ் என பெயர் வைத்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப் பலன்கள் அளிக்கப்படவில்லை. வருவாயை அதிகரித்து, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கலாம். ஆனால், கடன் வாங்கி கொடுக்கிறார். இப்படி கடன் வாங்கி கொண்டே சென்றால், எப்படி திருப்பி செலுத்துவது. வருவாயை அதிகரித்து உரிமைத்தொகை வழங்கினால் பாராட்டலாம்.அலங்கோல ஆட்சி நடக்கிறது.இந்தியாவில் வேறு மாநிலங்ளை காட்டிலும், கடன் வாங்குவதில் முதலிடமாக தமிழகம் உள்ளது. இதில் சாதனை படைத்துள்ளது.பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் கூறியது சரி என்று தானே சபாநாயகர் சொல்வார். மாற்றி சொன்னால், அந்த இருக்கையில் அமர முடியுமா ?பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அனைத்து உண்மை வெளியே வரும்.அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதிமுக., வழக்கு தொடர்ந்த பிறகு வேக வேகமாக விசாரிக்கின்றனர். அதிமுக., இல்லை என்றால், வழக்கை மூடிமறைத்து இருப்பார்கள். இதில், முக்கிய பிரமுகர் ஒருவர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால், யார் அந்த சார் என கேட்கிறோம். பெயரை சொல்லாத போதும் அவர்கள் கோபப்படுகின்றனர். அமைச்சர்கள் அறிக்கை வெளியிடுவதால் தான் சந்தேகம் எழுகிறது. நான் ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும். ஈ.வெ.ரா., குறித்த சீமானின் கருத்து வருத்தத்திற்குரியது. இறந்த தலைவரைப் பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
ஜன 12, 2025 10:48

ஒன்றியம் எவ்வழி... விடியல் அவ்வழி. எல்லாம் மக்கள் தலையில் கட்டுவாங்க. போங்க போங்க.


Mediagoons
ஜன 11, 2025 21:57

மத்திய குண்டர்களின் ரைடு மூலம் இவரை மோடிக்கு கொத்தடிமையாக மாற்றிவிட்டார்கள்


ManiK
ஜன 11, 2025 21:20

கடன் வாங்கியதில் மட்டுமல்ல,கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதிலும் நம்பர் 1 இந்த மானங்கெட்ட திமுக அரசு தான்


M Ramachandran
ஜன 11, 2025 20:47

கடன் வாங்கியதில் எவ்வளவு பணம் திசை மாற்றி அயல் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளது. அது விவரம் தெரிய வில்லை.


Ramesh Sargam
ஜன 11, 2025 20:31

திமுக ஆட்சியில் ஒவ்வொரு தமிழ்க்குடிமகன், டாஸ்மாக் குடிமகன் தலையிலும் பல லட்சம் கடன். வாங்கியது திமுக அரசு. அந்த கடன் பாரத்தை நமக்கே தெரியாமல் சுமப்பது குடிமக்கள், including டாஸ்மாக் குடிமக்கள். இலவசங்களை பெற்றுக்கொண்டு, கடன்சுமை தெரியாமல் இருக்கின்றனர் நமது குடிமக்கள்.


என்றும் இந்தியன்
ஜன 11, 2025 18:33

1000% சரி. இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதில் நிஜமாகவே சாதனை மேல் சாதனை போதுமடா சாமி பண்ணியிருக்கு இந்த கேவலாமான அரசு. இவர்கள் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டபோது 2021ல் ரூ 5.34 லட்சம் கோடி கடன் டாஸ்மாக்கினாடு இந்த மூன்று வருடத்தில் இன்னும் ரூ 3 லட்சம் கோடி அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ 1 லட்சம் கோடி கடனை ஏற்றி இப்போது ரூ 8.36 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கின்றது இந்த ஆட்சி இன்னும் 10 வருடம் தொடர்ந்தால் டாஸ்மாக்கினாட்டின் கடன் ரூ 25 லட்சம் கோடி இருக்கும் ஒருக்காலும் அதை தீர்க்கவே முடியாது. இவ்வளவு கேவலமான திராவிட மாடல் ஆட்சி நடக்கின்றது


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 18:56

ரொம்ம்ப சிம்பிள் காங்கிரஸ் 60 ஆண்டு ஆட்சி செய்து விட்டுச்சென்ற கடன் 54 லட்சம் கோடி.10 வருட கேடிஜி ஆட்சியில் இப்போ அது 205 லட்சம் கோடி அதாவது 10 வருடத்தில் 150 லட்சம் கோடி இதை எல்லா இந்தியரும் எப்படி அடைக்க போகிறோம்.இதில் கார்பொரேட் தள்ளுபடி மட்டும் 21 லட்சம் கோடி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 20:21

இதில் கார்பொரேட் தள்ளுபடி மட்டும் 21 லட்சம் கோடி ...... எந்த ஆடிட்டர் சொன்னாரு ? திமுக ஆடிட்டரா ? சமூக அக்கறை இருந்தா திமுக உச்சத்தில் வழக்கு தொடரலாமே ? போற போக்குல புழுதி வாரி தூற்றுவது மடமை ....


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 20:33

சரி நேர்மை என்றால் எவ்வளவு தான் WRITEOFF BADDEBTS கேடிஜி ஆட்சியில் சொல்லுங்களேன்.இல்லாய் WRITEOFF நடக்கவே இல்லை என்கிறீர்களா


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 20:34

தன்கரத்தினம் :: 10 வருடத்தில் 150 லட்சம் கோடி இதாவது உண்மையா இல்லை வேறு எப்படி 150 லட்சம் கோடி க்கு வெள்ளை அறிக்கை விடுவார்களா . இங்கு 4000 கோடி க்கு சிகப்பு அறிக்கை கேட்க தெரியுது அதே போல வெளி இட SOLLUNGAL


T.sthivinayagam
ஜன 11, 2025 18:01

கவலைகள் படாதிர்கள் ஈபிஸ் அவர்களே நமது பாரத பிரதமர் அவர்களே அதானி அம்பானி கடன்களை போல இதையும் தள்ளுபடி செய்ய சொல்லிவிடுவார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 16:47

கன்னியாகுமரி திருவள்ளுவர் கண்ணாடி பாலம் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் அனுமதி இல்லை ..... திறந்து பத்தே நாள்தான் ஆச்சு ..... இப்படியெல்லாம் நிதி பாழானால் ஏன் கடன் வாங்க மாட்டார்கள் ???? கேளுங்க தல ....


என்றும் இந்தியன்
ஜன 11, 2025 18:39

இலவசம் பெண்களுக்கு ரூ 1000 1.25 கோடி பெண்களுக்கு அதற்காக கடன் ரூ 1000x12x1.2 கோடி ரூ 14,400 கோடி இந்த மாதிரி செஞ்சி ரூ 1.1 லட்சம் கோடி வருடா வருடம் கடன் மூட்டையை ஏறிக்கொண்டே போகின்றது இதுக்கு முட்டு கொடுப்பதற்கு ரூ 200 உபிஸ்


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 18:58

சிவாஜி சிலை 900 கோடி , சிவன் சிலை மத்திய பிரதேசத்தில் 890 கோடி ஒரு வருடத்தில் ஸ்வாகா இடிந்து விழுந்து விட்டது சுக்கு நூறாக இதை எவன் கணக்கில் எழுதுவது


Barakat Ali
ஜன 11, 2025 19:24

திகழ்ஓவியன் , பாஜக சரியில்லை என்பதால் தமிழன் உள்ளே விடவில்லை என்கிறீர்கள் ..... பாஜக மாதிரிதான் நாங்களும் இருப்போம் என்றால் நீங்கள் எதற்கு ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 16:27

கடன் வாங்குவதில் தவறில்லை .... உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தணும் ..... இலவசங்களுக்கும், பேனா சிலைகளுக்கும் வாரிவிடக்கூடாது ....


Gopalakrishnan Thiagarajan
ஜன 11, 2025 16:23

ஒரு தகுதியற்ற மனிதரை பெரும் தலைவராக உருவகபடுத்தி பேசுவதும் சரியல்ல