உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா தமிழகம் முன்னிலை

3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா தமிழகம் முன்னிலை

புதுடில்லி:வாகனங்களுக்கு, 3,000 ரூபாய் செலுத்தி ஆண்டு பாஸ்டேக் சந்தா பெறும் திட்டம், நாடு முழுதும் கடந்த 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் இணைவோர், ஓராண்டு வரை அல்லது 200 முறை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும். இத்திட்டத்தில், கடந்த நான்கு நாட்களில், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 1.50 லட்சம் சந்தாதாரர்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி