சைபர் குற்றத்தை தடுக்க தமிழகம், மும்பை போலீஸ் கூட்டணி
சென்னை : இணையவழி குற்றவாளிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, பண மோசடி செய்து வருவதால், மும்பை மற்றும் தமிழக சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.தமிழகத்தில் நடப்பு ஆண்டு மட்டும், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், 1,100 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர். அவர்களில், 75 சதவீதம் பேர், மும்பை சி.பி.ஐ., அதிகாரிகள் போல பேசி, மிரட்டி பணம் பறித்துஉள்ளனர். இத்தகைய மோசடிகள் குறித்து, தமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூட்டு விசாரணையில் ஈடுபட்டுஉள்ளனர்.தமிழக சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், 'சைபர் குற்றவாளிகள், வங்கதேசத்தில் இருந்து, மும்பையில் உள்ள தங்கள் கூட்டாளிகளை இயக்குகின்றனர். அவர்களின், 'டார்க்கெட்' தமிழகமாக உள்ளது. 'இதனால், மும்பை போலீசாருடன் இணைந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.