உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூப் போலீசார் இல்லை தமிழக போலீசார்

டூப் போலீசார் இல்லை தமிழக போலீசார்

தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற 'டூப்' போலீஸ் இல்லை. தமிழக காவல் துறையின் நடவடிக்கையால் கொலை, கொள்ளையர்கள் போன்ற சமூக விரோதிகள் அண்டை மாநிலத்திற்கு குடி பெயர்கின்றனர். இப்படிப்பட்ட கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பதால் காவல் துறையினருக்கு துாக்கம் இருக்காது. தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்பதால், அவருக்கு துாக்கம் இருக்காது. மத்திய அமைச்சர்கள் அனைவரையும் தமிழகத்திற்கு அனுப்பி பாருங்கள். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் வரை எந்த கொம்பனாலும் தி.மு.க., ஆட்சியை அசைக்க முடியாது. ஒரு கன்னத்தை அறைந்தால், மறு கன்னத்தை காண்பிக்க; தி.மு.க., ஒன்றும் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை நடத்தவில்லை. சேகர்பாபு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !