உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!

விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். 'மீண்டும் வரலாமா, வேண்டமா என்பதை நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்' என்று தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்று நேற்று நடந்த செயற்குழுவில் வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே கூறி இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ch6fwgkn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் பிப்ரவரியில் நடந்த கட்சியின் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷார் பங்கேற்றார்.விஜயை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பேசிய அவர், 'விஜய் தமிழகத்தின் புதிய நம்பிக்கை' என்றும் கூறினார். 'தமிழகத்தின் மிகவும் பிரபலமான பீகாரியாக தோனி இருக்கிறார். அடுத்தாண்டு விஜய் கட்சி ஆட்சியை பிடிக்கும்போது, நான் தான் பிரபலமான பீகாரியாக இருப்பேன்' என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார். அதன்படி பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், த.வெ.க., உடன் இணைந்து தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.எல்லாம் சில மாதங்கள் சரியாக நடந்த நிலையில், இப்போது தமிழக தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பீகார் மாநில தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவரது கவனம் முழுவதும் அங்கு தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் விஜய் எடுத்த கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகளில், பிரசாந்த் கிஷோர் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் காரணமாக, விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேறி விட்டார். அவரது சார்பில் தமிழகத்தில் விஜய் கட்சிக்காக பணியாற்றிய 30 பேரும், சமீபத்தில் விலகிக்கொண்டு விட்டனர். அவர்களில் ஒரு சிலர், நேரடியாக ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.'நான் பீகார் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கிறேன். விஜய்க்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடலாமா, வேண்டாமா என்று நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்' என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Ganesun Iyer
ஜூலை 08, 2025 11:23

மறைமுகமா திமுகவிக்கு வேலை செய்ய விருப்பமில்லை...


V RAMASWAMY
ஜூலை 05, 2025 18:42

எல்லோரும் ரொனால்ட் ரீகனாகவும் எம் ஜி ஆராகவும் ஜெயலலிதா அம்மாவாகவும் ஆசை தான் படலாம். ஆனால் நடிப்பையும் கவர்ச்சியையும் பாராட்டும் எல்லா ரசிகர்களுமே மற்ற கட்சிகளின் ஆதரவாளர்களாகவும் இருக்கக்கூடும் என்பதால் முதல்வர் கனவு கொஞ்சம் அதிகம் தான்.


sankaranarayanan
ஜூலை 05, 2025 18:39

ஒரு பெருந்தொகையை வாங்கிக்கொண்டு பிரசாந்த் கிஷோர் விஜய்யை ஏமாற்றி விட்டார் இனியாவது அவரை புரிந்துகொண்டு தனது சொந்தகாலில் விஜய் நிற்க வேண்டும். இனி பிரசாந்த் கோஷர் அம்பேல்தான்.அவரை நம்பி இனி யாருமே பணம் கொடுக்காதீர்கள்.


தஞ்சை மன்னர்
ஜூலை 05, 2025 17:21

infrastructure மட்டும் செய்யவது மட்டும் தான் இவரது பணி payment முடிந்து விட்டது போய் விட்டார்


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 05, 2025 16:49

அடுத்த கோமாளி, சினிமாவும் போச்சு அரசியலும் போச்சு பாவம்


angbu ganesh
ஜூலை 05, 2025 16:44

மோதலுல தோண்டனும் ஆமா அவர் கட்சி அடுத்த வருஷம் தேர்தலுல நிக்குமா அதுவேய சந்தேகம் அரசியல் எல்லாம் எப்போ கழக ஆட்சிகள் வந்துச்சோ சாக்கடை ஆகிடுச்சி விஜய் தகுதினவர்தன் அந்த சாக்கடைக்கு ஆனா அங்கே பெரும் பழம் பெருச்சாளிகள் இருக்கே அப்படியே சாப்டிடும்


Rengaraj
ஜூலை 05, 2025 16:43

அன்று அண்ணா திமுகவை தொடங்கி தெருத்தெருவாக அலைந்து மேடை போட்டு பேசி கட்சியை வளர்த்தார். தொண்டர்களை உருவாக்கினார். அதனால் இன்றும் திமுக நிற்கிறது. திமுக போன்று எம்ஜிஆர் கிராமம் தோறும் ரசிகர்களை கொண்டும் தாய்மார்களின் ஆதரவோடும் மக்கள் உள்ளத்தில் இடம்பிடித்தார். அதை ஜெ அவர்கள் தனது கடைசி காலம் வரைக்கும் மங்காமல் பார்த்துக்கொண்டார். அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட காலம் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் தொழில்நுட்பம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை சென்றடையலாம் என்ற தவறான புரிதலில், விஜய் கட்சி ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழக மக்கள் அனைவரையும் அவர்கள் இடத்தில சென்று பார்க்கவில்லை. பொதுக்கூட்டம் போடவில்லை. வீதிவீதியாக செல்லவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழவில்லை. எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரவில்லை. பூத் கமிட்டி அமைக்கவில்லை. நிர்வாகிகள் நியமனம் பூர்த்தியாகவில்லை. அந்த கட்சியின் தொண்டர்கள் மாநில அளவில் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. அவருக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரை பற்றி ஊடகங்கள் அடித்துவிடும் பீலாக்களை நினைத்தால் தமிழக மக்களை முதிர்ச்சி அற்ற வாக்காளர்கள் என்று அனைத்து ஊடகங்களும் நினைக்கின்றனவோ என்ற சந்தேகம் வராமல் இல்லை. இந்த மாதிரி களத்தில் வேலை எதுவும் செய்யாமல் நேரே முதல்வர் பதவியை அடைந்துவிடலாம் என்று எப்படி கனவு காணுகிறார் என்று தெரியவில்லை..


K V Ramadoss
ஜூலை 05, 2025 20:17

தன்னை முதல் மந்திரி வேட்பாளர் என்று இப்போதே அறிவித்துக்கொண்டதிலிருந்து தெரிகிறது இவருக்கு அனுபவமும் இல்லை அரசியல் அறிவும் இல்லை என்று.. நிசசயம் மண்ணை கவ்வுவார்...


மயிலை தொண்டன்
ஜூலை 05, 2025 16:17

தளபதி அவர்கள் கட்சி ஆரம்பித்த நாள் முதல் அவர் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் பல தொண்டர்கள் வருகைதந்தும் அவர்களை சந்திக்க முடியாத அவரால், இதுவரை மக்களை சந்திக்காத வராத அவரால், கண்டிப்பாக தனியாக நின்று வெல்ல முடியாது. தொண்டனை பார்க்காமல், மக்களை பார்க்காமல் வந்தவுடன் எடுத்துத்தர அரியணை என்பது பொம்மையா ? மக்கள் முடிவு செய்யட்டும்.


Oviya Vijay
ஜூலை 05, 2025 16:06

இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்...


Ganesun Iyer
ஜூலை 08, 2025 11:49

நீங்க என்ன சொன்னாலும் மையம், நாம் தமிழர், விடுதலை சிறுத்தை மாதிரி திமுகவுக்கு எதிரான ஓட்டை ஒன்று சேரவிடாமல் உடைப்பதுதான் இந்த விஜய் கட்சிக்கும் குடுக்க பட்ட வேலை .. அடுத்து 1,2 எம்பி சீட்டுக்கு கட்சி திமுகவுக்கு விற்கப்படும்.


Oviya Vijay
ஜூலை 05, 2025 16:02

தேர்தல் ஆலோசகர் என்பதெல்லாம் ஒரு மாயை... ச்சும்மாக்காச்சும் மீடியா கொடுக்கும் ஒரு ஹைப்... அவ்வளவே... அவர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல... அப்படி இருந்தால் தன் சொந்த மாநிலத்திலேயே புதுக் கட்சியைத் தொடங்கி அவர் ஏன் தோற்கப் போகிறார்... தேர்தலில் ஆலோசகர் என்பது மனதில் தோன்றும் ஒரு அனுமானம்... இதெல்லாம் செய்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தன் உள்மனதில் தோன்றுவதை சொல்வது... அவ்வளவு தான்... அது நூறு சதவீதம் உண்மையாகத் தான் அமையும் என்பதில் உறுதியில்லை... மேலும் தனக்கு சம்பந்தமே இல்லாத அடுத்த மாநில மக்களின் உணர்வுத் துடிப்பைக் கணிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்லவே...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 05, 2025 16:27

ஆனாலும் அவர் பார்ப்பனராக இருந்தாலும் நம் பகுத்தறிவு மேதைகள் அவருக்கு பாத பூஜை செய்து தட்சிணை கொடுத்து அவர் சொல்வதைத்தானே கேட்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை